வழக்கறிஞர்களுடன் கூட்டு:- மோசடி: நீதிபதி சஸ்பெண்ட்
தர்மபுரி:
பொது மக்களிடம் இருந்து அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு அதிக நிதி பெற்றுத் தர அரசு வழக்கறிஞர், எதிர் தரப்பு வழக்கறிஞர்களுடன்கூட்டு சேர்ந்து மோசடி செய்த துணை நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு கையகப்படுத்தியற்கான நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் நிலம் தந்தவர்கள் கேட்டதைவிடவும்அதிகமாக நிதியைத் தருமாறு அரசுக்கு உத்தரவிட்டார் மாவட்ட முதன்மை சார் நீதிபதியான ஜஸ்டின் ஜார்ஜ்.
இதில் அரசுத் தரப்புக்காக வாதாடிய வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன், மனுதாரர்கள் அதிக தொகை கேட்டபோது அதை எதிர்க்கவில்லை.
இந் நிலையில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, மனுதாரர்கள் கேட்டதைவிடவும் அதிக தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இதில்மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞருடன் அவர் கூட்டு சேர்ந்து மோசடி செய்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பக விநாயகம், சதாசிவம், நாகப்பன் ஆகியோர் அடங்கிய ஒழுங்குநடவடிக்கைக் குழு, துணை ஜட்ஜ் ஜார்ஜை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்தது.
இதை ஏற்று அவரை தலைமை நீதிபதி மார்கண்டேயே கட்ஜூ சஸ்பெண்ட் செய்தார்.
இந்த விவகாரத்தில் அரசு வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஏற்கனவே பணி நீக்கம் செயயப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications