ஸ்ரீனிவாச்சார் கொலை: துப்பு கிடைத்தது

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் உத்திராதி மட நிர்வாகி ஸ்ரீனிவாசாச்சார் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது.

வரதராஜப் பெருமாள் கோவிலுக்குப் பின்புறம் உள்ள உத்திராதி மடத்தின் நிர்வாகியாக இருந்த பீகாரைச் சேர்ந்த ஸ்ரீனிவாச்சார் கடந்த 20ம்தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் நிதி நிறுவன அதிபர், உள்ளூர் நில புரோக்கர்கள் உள்ளிட்ட 20 பேரிடம் போலீஸார் விசாரணைநடத்தியுள்ளனர். இதில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும் கொலையாளிகள் குறித்த அடையாளமும் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என விசாரணை நடத்தி வரும் போலீஸ் குழுவின் முக்கிய அதிகாரியான கூடுதல் எஸ்பி பவானீஸ்வரிதெரிவித்தார்.

இதற்கிடையே கொல்லப்பட்ட ஸ்ரீநிவாச்சாரின் உடல் அவரது உறவினர் மற்றும் மடத்தின் நிர்வாகிகள் 4 பேரின் முன்னிலையில் நேற்றுதகனம் செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+