ஜெ. தானம்: வருமான வரித்துறை கோரிக்கை- கேரளம் நிராகரிப்பு
திருவனந்தபுரம்:
முதல்வர் ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாகக் கொடுத்த தங்கக் கிரீடத்தை ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்றுகேரள முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதா தங்கக் கிரீடம், யானை உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினார். இவற்றைசோதனையிட்டு ஆய்வு செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை வருமான வரித்துறை சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
கோவில் நிர்வாகம் முதலில் இதற்கு அனுமதி அளித்தது. ஆனால் இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குருவாயூர் கோவிலுக்குத்தரப்பட்ட காணிக்கையை யாரும் சோதனையிட அனுமதிக்கக் கூடாது என பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கிரீடத்தை ஆய்வு செய்ய கொடுத்த அனுமதியை ரத்து செய்யுமாறு கோவில் நிர்வாக அதிகாரிக்கு மாநில அரசு நெருக்குதல்தந்தது.
அனுமதி தந்த அதிகாரியை அழைத்து தண்டித்தது.
இந் நிலையில் இன்று காலை கேரள அமைச்சரவை முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் கூடி இப் பிரச்சினை தொடர்பாக விவாதித்தது.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சாண்டி பேசுகையில்,
வருமான வரித்துறையின் கோரிக்கை முறையற்றது, இதை ஏற்க முடியாது. கோவிலுக்குத் தானமாக கொடுக்கப்பட்டதை ஆய்வு செய்வதுஎன்பது கோவிலின் பாரம்பரியத்தைக் கெடுக்கும் விதமாக அமையும் என்றார்.
உம்மன் சாண்டி கிருஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வந்த கிரீடத்தை சோதனையிடஅனுமதித்தால் அவருக்கு அரசியல் சிக்கல் எழும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல முதல்வர் ஜெயலலிதா வழங்கிய இந்த கிரீடத்தை சோதனையிடுவதில் அதிக அக்கறை காட்டும் வருமான வரித்துறையைகட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் திமுகவைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் என்பதும் நினைவுகூறத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications