கலவையில் நிரந்தரமாய் தங்குகிறார் ஜெயேந்திரர்!
கலவை:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும் வரை கலவை மடத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் முடிவில்ஜெயேந்திரர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கலவை சங்கர மடத்தில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள ஜெயேந்திரர், இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை காஞ்சிபுரம் சங்கரமடத்திற்குச் செல்லக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இந் நிலையில் கடந்த 21ம் தேதி குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துவிட்டது போலீஸ். இதனால் ஜெயேந்திரர் மீண்டும் சங்கர மடம்திரும்ப இப்போது எந்தத் தடையும் இல்லை.
ஆனாலும் காஞ்சி மடத்துக்கு வருவதை ஜெயேந்திரர் தவிர்க்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மடத்தை தன் வசம் எடுக்கும் தீவிரத்தில் இருக்கும் தமிழக அரசு, ஜெயேந்திரர் அங்கு வருவதை துளியும் விரும்பவில்லை. அவ்வாறு அவர்மடத்துக்குத் திரும்பும்பட்சத்தில் அவர் மீது தமிழக அரசு மிகக் கடுமையான சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம் உள்பட) நடவடிக்கைஎடுக்கலாம் என்று கருதப்படுகிறது.
புதிய கட்டடங்கள்:
தமிழக அரசின் இந்த வேகம் குறையும் வரை அவர் காஞ்சி மடத்துக்குத் திரும்ப மாட்டார் என்றே தெரிகிறது. கொலை வழக்கு, ஆடிட்டர்வழக்கு விசாரணைகள் முடிந்து தீர்ப்பு வெளியாகும் வரை தொடர்ந்து கலவை மடத்திலேயே தங்கியிருக்க ஜெயேந்திரர் விரும்புவதாகத்தெரிகிறது.
இதையடுத்து கலவை மடத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் பணிகள் தொடங்கியுள்ளன. முதலில் மதில் சுவரை உயர்த்திக் கட்டும்வேலைகள் தொடங்கியுள்ளன. மேலும் பழைய அறைகளை செப்பனிடும் பணியும் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து சமையல் அறைகள், தங்குமிடங்கள் உள்ளிட்டவை கலவை பிருந்தாவன வளாகத்தில் கட்டப்படவுள்ளன.
காஞ்சியில் இருந்து வந்த பசுக்கள்:
நவீன வசதிகளுடன் கூடிய அறைகளைக் கட்டும் பணியும் தொடங்க இருக்கிறது. இதைப் பார்க்கையில் சில காலத்துக்கு சங்கர மடத்திற்குஜெயேந்திரர் திருப்ப மாட்டார் என்றே தெரிகிறது.
இதற்கிடையே, இன்று பெளர்னமி தினம் என்பதால் வழக்கமாக ஜெயேந்திரர் கோ பூஜை செய்வார். இதற்காக காஞ்சி சங்கரமடத்திலிருந்துபசு மாடுகள் கலவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications