பாமக எம்எல்ஏ முன் ஜாமீனை ரத்து செய்ய தமிழக அரசு மனு
டெல்லி:
கொலை வழக்கில் பா.ம.க. எம்எல்ஏ வேல்முருகனுக்குத் தரப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுமனு தாக்கல் செய்துள்ளது.
கடலூர் கவுன்சிலராக இருந்த வெங்கடேசன் என்பவர் பாமகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்தார். இதையடுத்து அவர் கடந்த ஆண்டுகொலை செய்யப்பட்டார்.
கட்சி மாறியதற்காக அவர் கொலை செய்யப்பட்டதாகவும், இந்தக் கொலையில் பண்ருட்டி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகனுக்குத்தொடர்பிருப்பதாகவும் கூறிய போலீசார் அவரைக் கைது செய்ய முயன்றனர்.
ஆனால், வேல்முருகன் தலைமறைவாகிவிட்டார். டெல்லியில் பாமக அமைச்சர்களின் பாதுகாப்பில் தலைமறைவாக இருந்த அவரைக் கைதுசெய்ய தமிழக போலீசார் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
இந் நிலையில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார் வேல்முருகன். இதன் பின்னரேவெளியில் தலைகாட்டினார். இதையடுத்து வேறு வழக்கில் அவரைக் கைது செய்யும் முயற்சிகளிலும் தமிழக போலீசார் முயன்றுவருகின்றனர். இதுவரை வேல்முருகன் தப்பியே வருகிறார்.
இந் நிலையில் கொலை வழக்கில் வேல்முருகனுக்குத் தரப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு நீதிபதி அகர்வால், நீதிபதி பாலசுப்பிமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
இதில் தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் கேடிஎஸ் துள்சி ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில்,
இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியங்கள் உள்ளன. அவர்களது ஒப்புதல் வாக்குமூலங்களும் உள்ளன. அந்த வாக்குமூலங்கள் மூலம்கொலையில் வேல்முருகனுக்கு தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதலாகியுள்ளது.
இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை. இந் நிலையில் முன் ஜாமீன் பெற்றுவிட்ட வேல்முருகன் சாட்சியங்களைக் கலைக்கமுயன்று வருகிறார். எனவே இந்த முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து எம்எல்ஏ வேல்முருகனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications