அன்னிய செலாவணி: பிரேம்ஸ் மீது குற்றம் பதிவு!
சென்னை:
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் செக்ஸ் சாமியார் பிரேமானந்தா மீது சென்னை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டன.
ஆஸ்ரமப பெண்களிடம் செக்ஸ் லீலை நடத்தியது, கொலைகள் செய்தது ஆகியவற்றுக்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுள்ள மோசடிசாமியார் பிரேமானந்தா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கும் சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் பிரேமானந்தா மீது இப்போது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக அவரை போலீஸார் கடலூர்சிறையிலிருந்து வேன் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
நீதிபதி பெருமாள் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தார். அப்போது பிரேமானந்தா மற்றும் ஆசிரம டிரஸ்டி தமயந்தி ஆகிய இருவரும்தங்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினர்.
பின்னர் வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
அதன் பின்னர் நீதிபதியிடம் பிரேமானந்தா ஒரு வேண்டுகோளை விடுத்தார். கடலூர் சிறையிலிருந்து என்னை மோசமான வண்டியில்போலீஸார் அழைத்து வந்தனர். வண்டியில் மண் அதிகம் உள்ளது. நல்ல வண்டியில் அழைத்து வரும்படி கோர்ட் உத்தரவிட வேண்டும்என்றார்.
இதுதொடர்பாக சிறை நிர்வாகத்திடம் முறையிடுமாறு பிரேம்சுக்கு நீதிபதி அறிவுரைத்தார்.


Click it and Unblock the Notifications
