நடுரோட்டில் கொட்டப்பட்டிருந்த சாக்லெட் மலை!
சென்னை:
சென்னை வியாசர்பாடி பகுதியில் நடுரோட்டில் சாக்லெட்கள் குவியல் குவியலாகக் கொட்டப்பட்டிருந்ததால் திடீர் பரபரப்புஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடி கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள ஜவகர் தெரு குப்பை மேடு அருகே நடுரோட்டில் ஏராளமான சாக்லெட்கள்கொட்டப்பட்டிருந்தன. சாக்லெட்களைப் பார்த்ததும் அந்தப் பகுதி மக்கள் அங்கு கூடினர்.
சிலர் ஆர்வமுடன் அந்த சாக்லெட்களை வாயில் போட்டு சுவைத்தனர். சாக்லெட் சாப்பிட்டவர்களுக்கு தொண்டையில் எரிச்சல்ஏற்பட்டது. மேலும் ஒருவித ரசாயன வாசனையும் அதில் வீசியது.
இதனால் அது விஷ சாக்லெட்டாக இருக்கலாம் என்ற பீதி மக்களிடம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.
துணை போலீஸ் கமிஷனர் சமுத்திரப்பாண்டி, உதவி கமிஷனர் முகமது காசிப் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர்.அவர்களது விசாரணையில் அந்த சாக்லெட்கள் மலேசியாவில் 1998ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை என்றும், விற்பனைசெய்யும் காலம் 2001ம் ஆண்டுடன் முடிந்து விட்டதால் ரோட்டில் கொட்டப்பட்டதும் தெரியவந்தது.
சென்னை வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள ஏ.ஆர்.ஏ. மார்க்கெட்டிங் நிறுவனம் அந்த சாக்லெட்களை விற்பனைசெய்யும் உரிமை பெற்றிருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. உடனே போலீஸார் வேப்பேரி சென்று விசாரித்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறினார்கள். கெட்டுப்போனஇந்த சாக்லெட்களை மாநகராட்சி ஊழியர்கள லாரியில் எடுத்துச் சென்று கொடுங்கையூர் குப்பை மேட்டில் குழி தோண்டிபுதைத்தனர்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சமுத்திரப்பாண்டி கூறுகையில், சில சாக்லெட் துண்டுகளை பரிசோதனைக்குஅனுப்பியுள்ளோம். இதைக் கொட்டியவர் யார் என்பது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications