பிற்பட்ட மாணவிகளுக்கு ஜெ. இலவச சைக்கிள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபு சமூகங்களைச் சேர்ந்த பிளஸ் ஒன்,பிளஸ் டூ படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2001ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவசசைக்கிள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இத் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 22.52 கோடிக்குஇலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத் திட்டத்துக்கு மாணவிகள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து இலவச சைக்கிள் திட்டத்தை விரிவுபடுத்தி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபு பிரிவுமாணவிகளுக்கும் சைக்கிள் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி மொத்தம் 2.5 லட்சம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.

ரூ. 44 கோடி மதிப்பில் இந்த இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இத் திட்டத்தை ஜெயலலிதா நாளை தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் மாவட்டங்களில், இலவச சைக்கிள்கள் வழங்கப்படும்.

இலவசமாக வழங்கப்படும் சைக்கிளின் விலை ரூ. 1,600 ஆகும். இந்த சைக்கிளை மாணவிகள் தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இலவசமாக வழங்கப்படும் சைக்கிள் விற்கப்பட்டாலோ அல்லது தவறாகபயன்படுத்தப்பட்டாலோ அந்த சைக்கிளுக்குரிய தொகை உரியவடமிருந்து வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+