ஓடிப்போனவராக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்!
ஈரோடு:
ஈரோட்டில் காணாமல் போன இன்ஸ்பெக்டரை கடந்த ஒரு வருடமாக போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவர்விட்டோடியாக(வேலையில் இருந்து ஓடிப் போனவர்) அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஜோதிகிருஷ்ணன். இவரது காவல் நிலைய எல்லைக்குட்பட்டபகுதியில் கடந்த 2003ம் ஆண்டு ஜூன் மாதம் நகராட்சி துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் ஈரோட்டில் பணிபுரிந்த ஒரு எஸ்.பிக்கும், டிஎஸ்பிக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது. அந்த விவரத்தைஅறிந்தவர் ஜோதிகிருஷ்ணன் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் ஜோதிகிருஷ்ணன் காணாமல் போனார்.
கொலை நடந்த 2 தினங்களுக்குப் பின் உயர் அதிகாரிகளை சந்திக்கச் செல்வதாகக் கூறிச் சென்ற ஜோதிகிருஷ்ணன் பின்னர் வீடுதிரும்பவே இல்லை. இதையடுத்து அவரது சகோதரரும், முன்னாள் எம்.பியுமான ராமலிங்கம், உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இதற்கு ஈரோடு எஸ்.பி. தாக்கல் செய்த பதில் மனுவில், ஜோதிகிருஷ்ணனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனால்அவர் எங்காவது தலைமறைவாகி இருக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜோதிகிருஷ்ணனை கண்டுபிடிப்பது தொடர்பாக போலீஸார் எடுக்கும்நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தொடக்கத்தில் இருந்தே ஜோதிகிருஷ்ணனைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டாத போலீஸார் பின்னர் அதை மொத்தமாகவேமறந்துவிட்டனர். அவரைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையும் கலைக்கப்பட்டுவிட்டது.
ஜோதிகிருஷ்ணன் காணாமல் போய் ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், சில வாரங்களுக்கு முன் ஈரோடு செஷன்ஸ்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரெளடி ஸ்டீல் ரவி, ஜோதிகிருஷ்ணனை ஆஜர்படுத்த வேண்டும் என்று மனுகொடுத்தார்.
இந்த மனுவிற்கு, ஜோதிகிருஷ்ணனைத் தேடி வருவதாக போலீஸார் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் ஜோதிகிருஷ்ணன் உட்பட 120க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில்90 சதவீதம் பேர் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கிடையே ஜோதிகிருஷ்ணனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக எஸ்.பி. கூறிய குற்றச்சாட்டை அவரது குடும்பத்தினர் தொடர்ந்துமறுத்து வருகின்றனர்.
இந் நிலையில் தகவல் எதுவும் கொடுக்காமல் பணிக்கு வராமல் இருப்பதாகக் கூறி ஜோதிகிருஷ்ணனை விட்டோடியாகஅறிவித்துள்ளது காவல்துறை.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications