புன்னகை மன்னன் படம் பார்த்து தற்கொலை!
திருப்பத்தூர்:
புன்னகை மன்னன் படத்தில் வருவது போல் மலையில் இருந்து குதித்து ஒரு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டாகுடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் மணி (22). மெக்கானிக் வேலைபார்த்து வரும் மணி அதே ஊரைச் சேர்ந்த நதியா (17) என்ற பெண்ணைக் காதலித்து வந்தார்.
நதியா சிங்கம்புணரியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் டூ படிப்பவர். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மணிவெளிநாடு சென்றுவிட்டு, கடந்த டிசம்பர் மாதம் தான் திரும்பி வந்தார்.
நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த மணியும், நதியாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அவர்களது காதலுக்குகருப்பையா எதிர்ப்பு தெரிவித்தார்.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி இரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புன்னகை மன்னன் படத்தை இருவரும் பார்த்தனர்.அதில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்புவதால் கமலும் ரேகாவும் தற்கொலை செய்து கொள்வது போன்று ஒரு காட்சி வரும். (இதில்கமல் தப்புவார், ரேகா இறப்பார்)
அதைப்பார்த்த மணியும், நதியாவும் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடந்த 3ம் தேதிபிரான்மலைக்கு சைக்கிளில் சென்ற இருவரும், சைக்கிளை மலையடிவாரத்தில் நிறுத்தி விட்டு மலை உச்சிக்குச் சென்றனர். பின்புமலையுச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது தெரியாமல் இருவரையும் அவர்களது வீட்டார் தேடினர். இது தொடர்பாக எஸ்.வி. மங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர்.பல இடங்களில் தேடிய போலீஸார் மலையடிவாரத்தில் அனாதையாக இருந்த சைக்கிளை மட்டும் மீட்டனர்.
இந் நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னையா, செல்வராஜ், நடராஜ், பழனிசாமி ஆகியோர் மலையில் உள்ள தர்காவிற்குபொருட்களைக் கொண்டு சென்றனர். அப்போது ஓரிடத்தில் துர்நாற்றம் வீசியதால் அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அங்கு 2 பிணங்கள் உருக்குலைந்து இருப்பதைக் கண்ட பிரான்மலை கிராம அலுவலர் வீரப்பன் மூலமாக போலீசுக்குத் தகவல்கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்த்தனர். பிணங்கள் உடல் சிதறி அழுகிக் காணப்பட்டாலும், உடைகளை வைத்தும்,நதியாவின் பள்ளிக்கூட அடையாள அட்டையை வைத்தும் இறந்தது மணியும், நதியாவும்தான் என்பதை உறுதி செய்தனர்.
புன்னகை மன்னன் பாணியில் நடந்த இந்த தற்கொலை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications