அருணா கொலைக்கு ரூ. 5 லட்சம் தந்த விஐபி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Arunaஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் வேல்துரை குஜராத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் மதுரைக்குக்கொண்டு வரப்பட்டார்.

முன்னாள் அமைச்சரான ஆலடி அருணா கடந்த டிசம்பர் 31ம் தேதி ஆலம்பட்டியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கியக்குற்றவாளிகளான பென்னி மற்றும் வேல்துரை ஆகியோர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழக போலீஸ் படையால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அப்போது பென்னியும் வேல்துரையும் விஷம் குடித்ததாகவும் இதில் பென்னி இறந்ததாகவும் தமிழக போலீஸ் கூறுகிறது. இருவரும் சயனைட் அருந்தியதாக குஜராத்போலீஸ் கூறுகிறது.

மர்மமான சூழலில் பென்னி இறந்துவிட வேல்துரை கவலைக்கிடமான நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உடல் நலம் தேறியதையடுத்து வேல்துரையை மிகுந்த பாதுகாப்புடன் நேற்று குஜராத்திலிருந்து சென்னைக்கு தனியார் விமானம் மூலம் அழைத்து வந்தனர்.

பின்னர் இரவு 7 மணியளவில் வேல்துரையை மதுரைக்கு விமானத்தில் கொண்டு சென்றனர்.

மதுரை சென்றடைந்ததும் வேல்துரை டாடா சுமோ மூலம் தென்காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தென்காசி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அனில்குமார்முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னதாக அவரை வழியில் ஒரு இடத்தில் வைத்து உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று இரவு விசாரித்தனர்.

முக்கியப் புள்ளி சிக்குகிறார்:

இதுவரை வேல்துரையிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மன்னரின் பெயர் கொண்ட முக்கியப் புள்ளி ஒருவர் (பல கல்லூரிகள் நடத்திவரும் முக்கியஸ்தர்) ரூ. 5 லட்சம் கொடுத்து ஆலடி அருணாவைத் தீர்த்தக் கட்டக் கூறியதாக போலீஸாருக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்தப் புள்ளி தற்போது போலீஸ் கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும், வேல்துரையிடமிருந்து உறுதியான வாக்குமூலம் கிடைத்தவுடன் அவர் கைது செய்யப்படுவார்என்றும் தெரிகிறது.

இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன், அழகர், ஆறுமுகம் ஆகியோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கொலைக்கு வேல்துரையும்பென்னியும்தான் திட்டமிட்டதாகவும், கொலைக்கு ரூ. 2 லட்சமும், போலீஸிடம் பிடிபட்டு, கொலை செய்யச் சொன்ன முக்கிய பிரமுகரைக் காட்டிக் கொடுக்காமல்இருந்தால் ரூ.3 லட்சமும் பேரம் பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அந்த முக்கிய பிரமுகர் யார் என்பது பென்னி மற்றும் வேல்துரைக்கு மட்டுமே தெரியும் என்றும் போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

அதெல்லாம் சினிமால தான்: டிஐஜி பேட்டி

முன்னதாக நெல்லை சரக டி.ஐ.ஜி. கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஸ்கர், பென்னி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதில் போலீஸாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை.அவர்களைக் கொல்ல வேண்டுமானால் ஒரே நேரத்தில் என்கெளண்டரில் கொன்றிருக்கலாம்.

பரபரப்பான இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதே எங்கள் நோக்கம். இந்த வழக்கில் கொலை செய்யச் சொல்லி வேல்துரைக்குபணம் கொடுத்தது யார் என்பது அவன் வந்து சொன்னபிறகுதான் தெரிய வரும்.

கொலைக் குற்றவாளிகளை அரசியல்வாதிகளுக்காக போலீஸார் மறைப்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். நிஜத்தில் அப்படிப்பட்ட அரசியல்வாதிகள்யாரும் இல்லை. நாங்களும் யாரையும் பாதுகாக்க விரும்பவில்லை.

மேலும் எங்களை பத்திரிக்கை நிருபர்கள், மத்திய உளவுப் பிரிவு போலீஸார், எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸார் என பலரும் கண்காணிக்கின்றனர். எங்கள் உயர்அதிகாரிகளுக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் உண்மைகள் தெரிய வரும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+