ஜெயேந்திரர்: வேலூர் சிறையிலும் சிபிஐ விசாரணை?
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயேந்திரர் வேலூர் சிறையில் இருந்தபோது அவருக்கு செய்துகொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
கலவை மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரிடம் சிபிஐ அதிகாரிகள் பாதுகாப்பு வசதிகள் குறித்தும், சங்கரராமன் கொலைகுறித்தும் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் சிபிஐ அதிகாரிகள் வேலூர் மத்திய சிறைக்கும் சென்றுள்ளனர். அங்கு ஜெயேந்திரருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புமற்றும் வசதிகள் குறித்தும் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கலவை, காஞ்சிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தியதை கோட்டை விட்ட மாநில உளவுத்துறைக்கு தமிழக அரசின் மேலிடம் டோஸ் விட்டதாகத் தெரிகிறது.
நிருபர்களை கண்காணிக்கும் உளவுத்துறை:
இதற்கிடையே ஜெயேந்திரர் தொடர்பாக செய்தி சேகரிக்கும் நிருபர்களைக் கண்காணித்து மேலிடத்திற்கு தகவல் அனுப்புமாறுமாநில உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து சங்கரமடத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் எந்தெந்த நிருபர்களுடன் பேசுகின்றனர் என்பதையும், அந்த நிருபர்கள்வேலை செய்யும் டிவி, செய்தித் தளம், பத்திரிகை குறித்தும், அதில் ஜெயேந்திரர் பற்றி வெளியாகும் செய்தி பற்றியும்உடனுக்குடன் மேலிடத்திற்கு உளவுத்துறையினர் தகவல் அனுப்பி வருகின்றனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications