பெண்கள் மட்டும் இழுக்கும் முருகன் கோவில் தேர்!
தருமபுரி:
தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை மகளிர்மட்டுமே இழுத்து வந்தனர்.
சமூகத்தில் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நெடுங்காலமாக இக் கோயிலில் இந்த வழக்கம் நடைமுறையில் இருந்துவருகிறது தமிழகத்தில் வேறெந்த கோயிலும் மகளிருக்கு இந்த சிறப்பு இல்லை.
இந்த ஆண்டு தைப்பூசத் தேர்த் திருவிழா கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. புற்று மண் எடுத்து முளையிடுதல் தொடங்கிகொடியேற்றம், ஆட்டுகிடா வாகனத்தில் சுவாமி வீதிஉலா, புலி வாகன உற்சவம், பூத வாகன உற்சவம், நாக வாகன உற்சவம்,திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கடந்த சில தினங்களாக நடந்தன.
விழாவின் சிறப்பம்சமான மகளிர் தேர் இழுத்தல் நடந்தது. தேரில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.1,000க்கும் அதிகமான பெண்கள் பக்தியுடன் தேரை நிலையில் இருந்து இழுத்து வந்தனர்.
ஏராளமான பெண்கள் உப்பு, சர்க்கரை கலவையை சுவாமி மீது தெளித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நிலையில் இருந்து 200 அடி தூரம்வரை மகளிர் தேரை இழுத்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி குமாரசாமிப்பேட்டை முக்கிய வீதி வழியாக தேரை இழுத்தனர்.
இன்று குதிரை வாகனத்தில் பிச்சாண்டவர் உற்சவமும், நாளை பூப்பல்லக்கு உற்சவம் மற்றும் கொடியிறக்கமும், நாளை மறுநாள் சயனஉற்சவமும் நடைபெறுகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications