கூட்டணிக்குள் உளவு போலீஸ் குழப்பம்: காங்.
மதுரை:
தமிழக சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கூட்டணி மாறுமா, மாறாதா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்றும், தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்றும் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் இளங்கோவன்தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சுனாமி நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு தாராளமாக நிதியுதவி அளித்து வருகிறது. நிவாரணப் பணிகள் முழுமையாகநடைபெறுகிறதா என்பதைப் பார்வையிட அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
ரூ. 40 கோடி செலவில் மதுரையில் உணவு பொருள் வணிக வளாகம் அமைக்க பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முதல்கட்டமாக ரூ. 11 கோடி நிதி வழங்கியுள்ளது.
தேயிலை, காபி, ரப்பர் போன்ற பொருட்களின் விலை வீழ்ச்சியடையாமல் இருக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
தமிழகத்தில் தற்போது காங்கிரஸ், திமுக கூட்டணியில் உள்ளது. இந்தக் கூட்டணி மாறுமா, மாறாதா என்பது தெரியாது. சட்டசபைத் தேர்தல்தேதி அறிவிக்கப்பட்ட பின்புதான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் சேர வாய்ப்பில்லை. காமராஜர் ஆட்சியைத் தமிழகத்தில் அமைப்பதுதான் காங்கிரஸின் லட்சியம். அந்தஆட்சி எப்போது அமையும் என்பதைக் கூற முடியாது. அதற்காக தொடர்ந்து நாங்கள் பாடுபடுவோம்.
மத்திய அமைச்சர் சரத் பவார் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியதால் கூட்டணி மாற வாய்ப்பிருக்கிறது என்று மாநில உளவுத்துறை போலீஸார் வதந்தியைப் பரப்புகிறார்கள். இதை ஆளுங்கட்சிக்கு சாதகமான அரசியலாக்க பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்படுவது அதிகமாகிவிட்டது. அதிமுக ஆட்சியில் முதலில் ஜெயலட்சுமி விவகாரம்பெரிதாக இருந்தது. பின்னர் அதை ஜெயேந்திரர் விவகாரம் பின்னுக்குத் தள்ளிவிட்டது. புதிது புதிதாக ஏதாவது ஒன்று நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்.
பின்னர் இளங்கோவன் மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் தமிழக காங்கிரஸ்தலைவர் சோ. பாலகிருஷ்ணனிடம் உடல் நலம் விசாரித்தார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications