For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அருணா கொலைக்கு ரூ. 5 லட்சம் தந்த முக்கிய புள்ளி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Arunaஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் வேல்துரை குஜராத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன்விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டார்.

முன்னாள் அமைச்சரான ஆலடி அருணா கடந்த டிசம்பர் 31ம் தேதி ஆலம்பட்டியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்தகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான பென்னி மற்றும் வேல்துரை ஆகியோர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழகபோலீஸ் படையால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அப்போது பென்னியும் வேல்துரையும் விஷம் குடித்ததாகவும் இதில் பென்னி இறந்ததாகவும் தமிழக போலீஸ் கூறுகிறது.இருவரும் சயனைட் அருந்தியதாக குஜராத் போலீஸ் கூறுகிறது.

மர்மமான சூழலில் பென்னி இறந்துவிட வேல்துரை கவலைக்கிடமான நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

உடல் நலம் தேறியதையடுத்து வேல்துரையை மிகுந்த பாதுகாப்புடன் நேற்று குஜராத்திலிருந்து சென்னைக்கு தனியார் விமானம்மூலம் அழைத்து வந்தனர்.

பின்னர் இரவு 7 மணியளவில் வேல்துரையை மதுரைக்கு விமானத்தில் கொண்டு சென்றனர்.

மதுரை சென்றடைந்ததும் வேல்துரை டாடா சுமோ மூலம் தென்காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும் அவரை வழியில் ஒரு இடத்தில் வைத்து உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று இரவு விசாரித்தனர்.

இன்று வேல்துரை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

முக்கியப் புள்ளி சிக்குகிறார்:

இதுவரை வேல்துரையிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மன்னரின் பெயர் கொண்டமுக்கியப் புள்ளி ஒருவர் (பல கல்லூரிகள் நடத்தி வரும் முக்கியஸ்தர்) ரூ. 5 லட்சம் கொடுத்து ஆலடி அருணாவைத் தீர்த்தக் கட்டக்கூறியதாக போலீஸாருக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்தப் புள்ளி தற்போது போலீஸ் கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும், வேல்துரையிடமிருந்து உறுதியான வாக்குமூலம்கிடைத்தவுடன் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன், அழகர், ஆறுமுகம் ஆகியோரிடம் போலீஸார் நடத்தியவிசாரணையில், கொலைக்கு வேல்துரையும் பென்னியும்தான் திட்டமிட்டதாகவும், கொலைக்கு ரூ. 2 லட்சமும், போலீஸிடம்பிடிபட்டு, கொலை செய்யச் சொன்ன முக்கிய பிரமுகரைக் காட்டிக் கொடுக்காமல் இருந்தால் ரூ.3 லட்சமும் பேரம் பேசப்பட்டதாகத்தெரிவித்துள்ளனர்.

அந்த முக்கிய பிரமுகர் யார் என்பது பென்னி மற்றும் வேல்துரைக்கு மட்டுமே தெரியும் என்றும் போலீஸாரிடம் அவர்கள்தெரிவித்தனர்.

அதெல்லாம் சினிமால தான்: டிஐஜி பேட்டி

முன்னதாக நெல்லை சரக டி.ஐ.ஜி. கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஸ்கர், பென்னி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதில்போலீஸாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களைக் கொல்ல வேண்டுமானால் ஒரே நேரத்தில் என்கெளண்டரில்கொன்றிருக்கலாம்.

பரபரப்பான இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதே எங்கள் நோக்கம். இந்த வழக்கில் கொலை செய்யச்சொல்லி வேல்துரைக்கு பணம் கொடுத்தது யார் என்பது அவன் வந்து சொன்னபிறகுதான் தெரிய வரும்.

கொலைக் குற்றவாளிகளை அரசியல்வாதிகளுக்காக போலீஸார் மறைப்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். நிஜத்தில்அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் யாரும் இல்லை. நாங்களும் யாரையும் பாதுகாக்க விரும்பவில்லை.

மேலும் எங்களை பத்திரிக்கை நிருபர்கள், மத்திய உளவுப் பிரிவு போலீஸார், எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸார் என பலரும்கண்காணிக்கின்றனர். எங்கள் உயர் அதிகாரிகளுக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். இன்னும் சில நாட்கள்காத்திருந்தால் உண்மைகள் தெரிய வரும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X