திருச்சியில் அழிக்கப்பட்ட ரூ.11 கோடி ஹெராயின்!
திருச்சி:
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று அழிக்கப்பட்டன.
10.92 கிலோ ஹெராயின், 98 கிலோ கஞ்சா மற்றும் மார்பின் ஆகியவை தனியார் இரும்பாலையில் உள்ள கொதிகலனில் போட்டுஎரிக்கப்பட்டதாக சுங்கத் துறை துணை ஆணையர் முருகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்தப் பொருட்கள் திருச்சி விமான நிலையம், தூத்துக்குடி, குளச்சல். தொண்டி மற்றும் அறந்தாங்கியில் கைப்பற்றப்பட்டவையாகும்.கடலோரப் பகுதிகளில் சுங்கத் துறை மேற்கொண்ட தீவிர கண்காணிப்பின்போது இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த 2001-02ம் ஆண்டில் 69.3 கிலோ ஹெராயின் பிடிபட்டது. இது தொடர்பாக 3 இந்தியர்களும், பல வெளிநாட்டவரும் கைதுசெய்யப்பட்டனர். அதற்கு அடுத்த வருடம் 36.9 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
2003-04ம் ஆண்டின்போது 15.6 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வருடத்தில் கடந்த மாதம் 31ம் தேதி வரை 0.72கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 6 இந்தியர்களும், வெளிநாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர் என்று கூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications