வாக்காளர் பட்டியலில் இனி குளறுபடி நேராது
கோவை:
தமிழகத்தில் இனி வாக்காளர் பட்டியலில் குளறுபடி நேராது என்று மத்திய துணைத் தேர்தல் ஆணையர் ஏ.என்.ஜா கூறினார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஏ.என்.ஜா ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சென்னை மண்டல ஆட்சித் தலைவர்களுடனும், நேற்று மதுரை மண்டல ஆட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
இன்று கோவை மண்டல ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தேர்தல் செயலாளர் பிரசாத், தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.என்.ஜா கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் நடைபெற்றபோல் வாக்காளர் பட்டியலில் இனி குளறுபடி நடைபெறாது. இந்த விஷயத்தில் நாங்கள் சிறப்புக்கவனம் எடுத்திருக்கிறோம்.
வாக்காளர் பட்டியலைத் திருத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக முதல்கட்ட வேலைகள் பிப்ரவரி 1ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கும்.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தேர்தல் ஆணையம் 3 கட்ட நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தில்உள்ளூர் மக்களை ஈடுபடுத்துவது, ஆன்லைனில் பதிவு செய்வது, விரிவான அளவில் அரசியல் கட்சியினரையும் பொதுமக்களையும்பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது ஆகியவை இதில் அடங்கும்.
வாக்காளர் பட்டியலை முழுமையாகத் தயார் செய்த பின்பு வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கும் பணி நடைபெறும் என்றுகூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications