ராமேஸ்வரம் செல்கிறாரா ஜெயேந்திரர்?

Subscribe to Oneindia Tamil

கலவை:

Jeyandrar விரைவில் காவிரியில் புனித நீராடி விட்டு ராமேஸ்வரம் செல்ல ஜெயேந்திரர் தீர்மானித்திருப்பதாக மடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள்கூறுகின்றன.

ராமேஸ்வரத்தில் காஞ்சி மடத்தின் கிளை உள்ளது. அங்கு தினமும் பூஜைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமியை தொட்டு அபிஷேகம் செய்ய கோயில் குருக்களைத் தவிர, ஜெயேந்திரருக்கும் இலங்கைமன்னரின் வாரிசுக்கும் மட்டும்தான் அனுமதி உள்ளது.

ஜெயேந்திரர் ஜாமீனில் விடுதலையானதும் காவிரியில் புனித நீராடி விட்டு, ராமேஸ்வரம் செல்லத் தீர்மானித்திருந்தார். ஆனால்விஜயேந்திரர் கைது செய்யப்பட்டதால், அத் திட்டம் கைவிடப்பட்டது.

கலவைக்கு ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் இருப்பதாலும், அவர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் பிரச்சினை இல்லாமல்இருப்பதாலும் ஜெயேந்திரர் மனநிறைவுடன் இருக்கிறார். காஞ்சி மடத்தில் நிலைமை சீரானதும் ஜெயேந்திரர் ராமேஸ்வரம் செல்வார் என்றுமடத்திற்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

கூட்டம் நடத்த அனுமதி கோரும் விஎச்பி:

இதற்கிடையே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மைலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக்கக்கோரி விசுவ இந்து பரிஷத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வி.எச்.பி. பொதுச் செயலாளர் நாராயணசாமி தாக்கல் செய்துள்ள அந்த மனுவில்,

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பல போராட்டங்களை வி.எச்.பி. அமைதியாக நடத்தி வருகிறது. இதனால் எந்தப்பிரச்சனையும் ஏற்பட்டதில்லை.

அண்மைக்காலமாக பொதுக்கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி தருவதில்லை. போராட்டங்களுக்கு முந்தைய நாள்தான் அனுமதிதருகின்றனர். வள்ளுவர் கோட்டம் அருகே சங்கர மட பெண் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தரவில்லை.

கடந்த 12ம் தேதி சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர்சி.பி. ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயேந்திரர் கைதை நாங்கள் எதிர்த்து வருவதால், வேண்டுமென்றே எங்கள் இயக்கத்தை நசுக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர். ஜெயேந்திரர் கைது தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலம் அடங்கிய கேசட் ஆகியவற்றை குறிப்பிட்ட பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

வருகிற 6ம் தேதி சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி,வி.எச்.பி. செயலாளர் வீரபாகு சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடிதம் தந்தார். ஆனால் 12 நாள் ஆகியும் அதற்கு பதில் தரப்படவில்லை.

எனவே அனுமதி கேட்டு நாங்கள் அளித்த கடிதத்திற்கு கமிஷனர் தக்க பதில் தரும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.

இந்த மனு குறித்து வருகிற 31ம் தேதிக்குள் (நாளை மறுநாள்) பதில் தரும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி சிவசுப்பிரமணியன்உத்தரவிட்டார். இந்த மனு 31ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+