எம்மொழியும் செம்மொழியாக 2,000 ஆண்டு தொன்மை வேண்டும்- கருணாநிதி
சென்னை:
தமிழக கடலோரப் பகுதிகளை சுனாமிப் பேரலைகள் தாக்கி அழித்துக் கொண்டிருந்தபோது, குமரிக் கரையில் இருந்த 133 அடி உயர்திருவள்ளுவர் சிலை என்னவாகுமோ என்ற பயத்தில் நான் ஆழ்ந்து போனேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலி அறக்கட்டளை சார்பில் கலைஞர் விருதுகள் வழங்கும் விழா அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதில் கோவி மணிசேகரன்,சிற்பி கணபதி ஸ்தபதி (குமரி வள்ளுவர் சிலையை வடித்தவர்), திரைக் கதை ஆசிரியர் சொர்ணம் ஆகியோருக்கு கலைஞர் விருதுக"வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், கடந்த டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலைகள் தமிழக கடலோரப் பகுதிகளை தாக்கி சீரழித்துக்கொண்டிருந்தன. அப்போது எனது உடல் நலம் பாதிக்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். அப்போதும் கூட எனது கவலையெல்லாம்கடலோர மக்கள் குறித்தும், குமரிக் கடலில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை குறித்தும்தான் இருந்தது.
வள்ளுவர் சிலைக்கு என்னாகுமோ என்று பயந்தேன். ஆனால் சுனாமியால் சிலைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதுதெரிந்தவுடன்தான் எனது உயிர் பிழைத்தது.
2001ம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. இருந்தாலும் ஆளுநரைச் சந்தித்தேன். எந்தக் கட்சி மீதும் புகார்கூறுவதற்காக இல்லை, குமரிக் கரையில் உள்ள வள்ளுவர் சிலை உப்புக் காற்று பட்டு உருக்குலைந்து போகும்.
எனவே 6 மாதத்திற்கு ஒருமுறை வர்ணம் பூச வேண்டும். நீங்களே அதைப் பார்வையிட்டு உரிய ஆணை பிறப்பிக்க ஏற்பாடு செய்யுங்கள்என்று கேட்டேன். உடனடியாக பூசப்படவில்லை என்றாலும் கூட தற்போது வர்ணம் பூசப்பட்டு சிலை காப்பாற்றப்பட்டுள்ளது.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கான நடைமுறைகள் இன்னும் முழுமை அடையவில்லை. விரைவில்அந்தப் பணிகள் முழுமை அடையும் என்று நம்புகிறேன்.
ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க அதற்கு 2,000 ஆண்டுகள் தொன்மை இருக்க வேண்டும் என்ற தகுதியை உருவாக்க வேண்டும்என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அந்தக் கோரிக்கை ஏற்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழை செம்மொழியாக அறிவித்ததுடன் நமது பணி முடிந்து விடவில்லை. நமது மொழி தொன்மையானது, செம்மையானது, 2,000ஆண்டுகள் பழமையானது என்று மற்றவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும், நமது மொழியை செம்மொழி என்று பிற மொழிக்காரர்கள்ஏற்கச் செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications