ஞானபிரசேந்திரர் மீதும் வழக்கா?
கலவை:
காஞ்சி சங்கரமடத்துக்கு 3வது சங்கராச்சாரியாராக நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் ஞானபிரசேந்திர சரஸ்வதி மீதும் வழக்கு தொடரபோலீஸார் முயற்சிப்பதாகத் தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஜெயேந்திரர் இப்போது கலவை மடத்தில் தங்கியிருக்கிறார். இதேவழக்கில் கைதாகிய விஜயேந்திரர் இப்போது சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் காஞ்சி மடத்தில் பூஜை தடையின்றித் தொடர 3வதாக ஒரு சங்கராச்சாரியாரை நியமிக்க ஜெயேந்திரர் முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. இதற்காக கர்நாடக மாநிலம் மத்தூரைச் சேர்ந்த தியாகராஜர் என்ற ஞானபிரசேந்திரர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
ஞானபிரசேந்திரர் ஜெயேந்திரரின் தீவிர பக்தர். தற்போது கலவையில் ஜெயேந்திரருடன் தங்கியிருந்து பூஜைகள் செய்வதில் உதவிவருகிறார். இவர் 3வது சங்கராச்சாரியாராக நியமிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
3வது சங்கராச்சாரியார் நியமிக்கப்பட்டால் சங்கரராமன் கொலை வழக்கின் சாட்சிகளில் சிலர் நிலைமாற வாய்ப்பிருக்கிறது என்றும்போலீஸார் கருதுகின்றனர். எனவே இதைத் தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து ஞானப்பிரசேந்திரரின் கடந்த காலம் குறித்து தகவல்க் திரட்டும் பணியில் உளவுப் போலீஸ் இறக்கிவிடப்பட்டுள்ளது.
கலவையில் ஞானபிரசேந்திரரை கண்காணிக்கும் போலீஸார் அதே வேளையில், மத்தூர் மற்றும் அவரது சொந்த ஊரான மும்பையில் அவர்மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.
3வது சங்கராச்சாரியாராக இவர் நியமிக்கப்பட்டால் வழக்கு ரூபத்தில் ஏதாவது தடை போடப்படலாம் என மடத்தில் உள்ளவர்களும்கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கலவையில் இப்போது பக்தர்களைவிட உளவுத் துறை போலீஸாரையே அதிகம் பார்க்க முடிகிறது. பக்தர்கள் போர்வையில் நெற்றியில்பட்டை, கழுத்தில் கொட்டை, வேட்டி, வெள்ளை சட்டையுடன் தொந்தியை மட்டும் மறைக்க முடியாமல் நம் உளவு போலீஸ் படும் பாடுசொல்லி மாளாது.
ஜெயேந்திரரை சந்தித்துவிட்டு வருபவர்களின் விவரங்களைத் திரட்ட, பல நேரங்களில் அவர்களிடமே சென்று, ஸார் உங்க பேர், ஊர்என்ன என்று தலையை சொறியும் சில போலீசாரையும் பார்க்க முடிகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications