84 நாட்களுக்குப் பின் ஜெயேந்திரர்-விஜயேந்திரர் நேருக்கு நேர்!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேருக்கும் வரும் பிப்ரவரி 3ம் தேதி குற்றப் பத்திரிக்கை நகல்வழங்கப்படவுள்ளது. இதற்காக அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ஜெயேந்திரர் இப்போது ஜாமீனில் கலவையில் தங்கியிருக்கும் நிலையில், விஜயேந்திரர், ரகு, அப்பு, அப்ரூவராகிவிட்ட ரவிசுப்பிரமணியம், சுந்தரேச அய்யர், கூலிப் படையினர், போலி குற்றவாளிகள் அனைவரும் சென்னை மற்றும் கடலூர் சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது ஏற்கனவே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிலையில் அதன் நகலை அனைவரிடமும் நீதிமன்றம் தனித்தனியாகவழங்க வேண்டும். இதற்காக வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 3ம் தேதி) இவர்கள் காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
நவம்பர் 11ம் தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் வெளியே வந்த டிசம்பரி 10ம் தேதி இளையவர் கைதுசெய்யப்பட்டுவிட்டார். இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இன்றொடு 79 நாட்களாகிவிட்டது.
இந் நிலையில் வரும் 3ம் தேதி இருவரும் 84 நாட்கள் இடைவெளிக்குப் பின் நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க இருக்கின்றனர்.
போலீஸ் காவலில் இருந்தபோது விஜயேந்திரருக்கு எதிராக ஜெயேந்திரர் கொடுத்த வாக்குமூல வீடியோவை போலீசார் கசிய விட்டதன்மூலம் இருவருக்கும் இடையிலான மனக் கசப்பு வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இந் நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் இத்தனை நாள் இடைவெளிக்குப் பின் சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. சிறையில்இருந்த ஜெயேந்திரரை இளையவர் சந்திக்கவில்லை என்பதும் நினைவுகூறத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications