ஆலடி அருணா கொலை: பிரபல கல்வி நிறுவன அதிபர் கைது
திருநெல்வேலி:
ஆலடி அருணா கொலை வழக்கில் தென் தமிழகத்தின் மிகப் பிரபலமான கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜா இன்று கைதுசெய்யப்பட்டார்.
ஆலடி அருணா கொலை வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ பாஸ்கர்,பென்னி ஆகியோர் மர்மமான முறையில் போலீஸ் பிடியில் இறந்தனர். முக்கியக் குற்றவாளியான வேல்துரையிடம் போலீஸார்தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந் நிலையில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்.ஏ.ராஜாதான்கொலையாளிகளை ஏவியதாக போலீஸாருக்குத் துப்பு கிடைத்துள்ளது.
ஆனால், இந்தத் தகவலை வேல்துரை உறுதிப்படுத்த மறுத்தான். அவனிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அருணாவைக்கொலை செய்ய ராஜா தான் தூண்டினார் என்று ஒப்புக் கொண்டான்.
இதைத் தொடர்ந்து இன்று வடக்குன்குளம் சென்ற நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் குமார் சோமானி எஸ்.ஏ.ராஜாவை கைதுசெய்தார்.
பின்னர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட எஸ்.ஏ.ராஜா அம்பாசமுத்திரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார். இதற்காக அவரை பலத்தபாதுகாப்புடன் போலீசார் அம்பாசத்திரம் கொண்டு செல்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்.ஏ.ராஜாவை அப் பகுதியினர் சர்தார் என்றுதான்அழைப்பது வழக்கம்.
ஏற்கனேவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் ராஜா. இவரது மருத்துவக் கல்லூரியில் படித்த ஒரு மாணவி மர்மமான முறையில்இருந்தார். கல்லூ விடுதியில் பாலியல் கொடுமைகள் நடப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டன.
ராஜாஸ் பொறியியல் கல்லூரி, ஜெயமாதா பொறியியல் கல்லூரி, ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி, சர்தார் ராஜா பொறியியல்கல்லூரி, சர்தார் ராஜாஸ் கலை அறிவியல் கல்லூரி, இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், ஜோய் சுரேஷ் பொறியியல்கல்லூரி, சர்தார் ராஜா கம்யூனிட்டி காலேஜ், எஸ்ஏ ராஜா பார்மஸி கல்லூரி, ராஜாஸ் தொழில் பயிற்சி மையம், ராஜாஸ்பாலிடெக்னிக் என தென் தமிழகத்தில் கல்விக் கடை பரப்பியவர் ராஜா.
ஏகப்பட்ட பணம், செல்வாக்கு, அடிதடிப் படை என வாழ்ந்து வருபவர். சமீபத்தில் இவரது கல்லூரிகளில் சிலவற்றுக்கு அகிலஇந்திய தொழிநுட்பக் கல்வி கவுன்சிலில் இருந்து சில தடைகள் வந்தன. இவரது கல்லூரிகளில் சில பொறியியல் கல்வித்துறைகளுக்கு தந்த அங்கீகாரத்தை ரத்து செய்தது கவுன்சில். இதற்கு ஆலடி அருணா தான் காரணம் என நினைத்தார் ராஜா.
மேலும் அங்கீகாரம் ரத்தானதால் ராஜாவின் கல்லூரிகளில் இருந்து விலகி வந்த மாணவர்களை அருணா தனது பொறியியல்கல்லூரியில் சேர்த்துள்ளார்.
ந்தப் பின்னணியில் தான் அருணாவின் கொலை நடந்துள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications