ராமதாஸை திட்டிய ஜெவுக்கு கமல் நன்றி!
சென்னை:
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை எதிர்க்கும் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதாகண்டனம் தெரிவித்துள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோரி வரும் பாமக நிறுவனர்ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவனும், கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின்பெயரையும், எஸ்.ஜே. சூர்யாவின் பி.எப் படப் பெயரையும் தமிழில் மாற்றாவிட்டால் படத்தை ஓட விடமாட்டோம் என்றுஎச்சரித்துள்ளனர்.
இந்த இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, படங்களை ஓட விடாமல் தடுக்க முற்பட்டால் தமிழககாவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடவே திமுக தலைவர் கருணாநிதிக்கும் டோஸ்விட்டார்.
ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரை கண்டித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்,
தமிழக முதல்வருக்கு நன்றி எனும் வார்த்தையை தவிர வேறு எது சொன்னாலும் அது அரசியல் ஆகி விடும். எனக்குத் தமிழ் தெரிந்த அளவுகூட அரசியல் தெரியாது.
அரசியலை ஒரு கலையாகவே மாற்றும் அரசியல்வாதிகளை நான் மதிக்கிறேன். ஆனால் கலையை அரசியல் ஆக்குவது ஆரோக்கியம்அல்ல என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் கமல்.
ஏற்கனவே சண்டியர் பட டைட்டில் தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமியால் பிரச்சனை எழுந்தபோது முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துஆலோசனை கேட்டார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு படத்தின் பெயரையும் மாற்றினார்.
ராமதாசுக்கு பாஜக கண்டனம்:
இதற்கிடையே ராமதாஸ், திருமாவளவனுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழ்த் திரையுலகம் நொடிந்து போயுள்ளது. இந் நிலையில் அரசியல்வாதிகள் தலையீடு கலைத் துறையின்வளர்ச்சிக்கு உதவாது. இது கண்டனத்துக்குரியது.
திரைத் தொழிலை நம்பியிருக்கும் ஏராளமான குடும்பத்தினரின் வாழ்க்கையை சீரழிக்க முயலக் கூடாது. முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,படங்களைத் தடுத்தால் அரசு வேடிக்கை பார்க்காது என்று கூறியிருக்கிறார். கலைத் துறையினர் சுதந்திரமாக படம் எடுப்பதையும், தயாரிப்பதையும் தமிழகஅரசு பாதுகாக்க வேண்டும்.
படங்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பது பணத்தைப் போட்டு முதலீடு செய்பவர்களின் சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிடக் கூடாது.
முன்பு தாதாக்களின் பிடியில் சிக்கி மும்பை திரையுலகம் தவித்தது. அதுபோல அரசியல்வாதிகளின் கையில் சிக்கி தமிழ் திரையுலகம் சிக்க சீரழிய அனுமதிக்கக்கூடாது.
சட்டத்தைக் கையில் எடுக்க ராமதாஸ், திருமாவளவனுக்கு அதிகாரம் இல்லை என்றார்.
கோடம்பாக்கத்தில் சில படங்களுக்கு ராதாகிருஷ்ணனும் முதலீடுகளைச் செய்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
முஸ்லீம் லீக் கண்டனம்:
அதே போல தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூது அளித்த பேட்டியில், ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என முதல்வர் கூறியுள்ளதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.
ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் மொழி கெட்டுப் போய் விடாது. வியாபாரத்துக்காகத்தான் அவ்வாறு பெயர் வைக்கிறார்கள். இதை முடக்கயாருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications