வீரப்பன் சாவு: சிபிஐ விசாரணை கோரும் மனைவி
சென்னை:
தனது கணவர் வீரப்பன் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக முத்துலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுவில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழக அதிரடிப்படைத்தலைவர் விஜயக்குமாரும், கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் ஜோதி பிரகாஷ் மிர்ஜியும் முரண்பாடான தகவல்களை அளித்துவருகின்றனர்.
வீரப்பன் சாவு குறித்து விசாரித்த உண்மை அறியும் குழுவும், பல்வேறு புதிய தகவல்களைக் கொடுத்துள்ளது.
இவையனைத்தும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளன. அதிரடிப்படை தெரிவித்த கருத்துக்கு எதிராக உள்ளது. இதனால் வீரப்பன் எப்படிகொல்லப்பட்டார் என்பது புதிராக உள்ளது. இது தொடர்பாக பொது மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய சிபிஐ விசாரணைக்குஉத்தரவிட வேண்டும். வீரப்பனின் உடலைத் தோண்டியெடுத்துமீண்டும் பிரேதப் பசோதனை செய்ய வேண்டும் என்று தனது மனுவில் முத்துலட்சுமி கூறியுள்ளார்.
முத்துலட்சுமி தாக்கல் செய்த மனுவில் உள்துறை செயலாளர், டிஜிபி, கூடுதல் டிஜிபி, தருமபுரி ஆர்டிஓ, சிபிஐ இணை இயக்குனர்கள்ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications