நடு ரோட்டில் கட்டிப்புரண்ட எஸ்.ஐகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாகன சோதனைக்கு ஜீப்பை யார் எடுத்துச் செல்வது என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட அசிங்கம் சென்னையில் நடந்தது.

சென்னை அண்ணா நகர் சரகத்திற்குட்பட்ட கொளத்தூர் காவல் நிலைத்தில் தங்கசாமி, பக்கிரிச்சாமி ஆகிய இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள்பணியாற்றி வருகிறார்கள்.

சனிக்கிழமை நள்ளிரவில், சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டரான தங்கசாமி, காவல் நிலையத்தில் இருந்த ஜீப்பை எடுத்துக் கொண்டுகொளத்தூர் மூகாம்பிகா திரையரங்கு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டரான பக்கிரிசாமி, ஜீப்பை ஏன் எடுத்து வந்தீர்கள், எனக்கு ஜீப் வேண்டும் என்றுகேட்டுள்ளார்.

நான் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளேன், ஜீப்பைத் தர முடியாது என்று தங்கசாமி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இருவரும் நடு ரோட்டில்கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.

நள்ளிரவில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது.

இதைத் தொடர்ந்து இருவரையும் அழைத்து உதவி போலீஸ் கமிஷனர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+