காஞ்சி மட கணக்குகளை திருத்திய விஸ்வநாத அய்யருக்கு ஜாமீன்
செங்கல்பட்டு:
காஞ்சி சங்கர மடத்தின் கணக்காளர் காலடி விஸ்வநாத அய்யரை ஜாமீனில் விடுவிக்க செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சங்கர மடத்தின் கணக்குகளை திருத்தி எழுதியதாக காலடி விஸ்வநாத அய்யர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்டவிசாரணைக்குப் பின்னர் மேலாளர் சுந்தேரச அய்யரும் கைது செய்யப்பட்டார்.
காலடி விஸ்வநாத அய்யர் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்குவந்தபோது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆறுமுகம் வாதிடுகையில்,
சுந்தரேச அய்யர் கூறியதன் பேரிலேயே கணக்கு புத்தகங்களைத் திருத்தியதாக விஸ்வநாத அய்யர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.மேலும் 9 கணக்குப் புத்தகங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில், கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை, 5வது கணக்குப் புத்தகத்தில் 143, 156, 157 ஆகியபக்கங்களையும், 1.7.2004 முதல் 18.10.2004 வரை 31, 32, 67, 68ம் பக்கங்களையும், 1.4.01 முதல் 27.7.04 வரை 31, 32வதுபக்கங்களையும் திருத்தியுள்ளனர் காலடி அய்யர்.
திருத்தியது தடயவியல் சோதனையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஸ்வநாதனை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது.எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அக்பர் அலி, விஸ்வநாதன் ஏற்கனவே 42 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். மேலும், தேவையானஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துவிட்டனர்.
எனவே அவரது முதுமையைக் கருத்தில் கொண்டு ஜாமீனில் விடுதலை செய்கிறேன். ஒரு மாதத்திற்கு தினமும் காலை 10 மணிக்குசிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications