தமிழில் படப் பெயர்: ஜெவுக்கு ராமதாஸ் பதில்
சென்னை:
தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று ஜெயலலிதா சட்டம் போடும் நிலை வரும் என்று பாமக நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருமாவளவனும், ராமதாஸும்வற்புறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக கமல்ஹாசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். திரைப்படங்களை தடுக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் எச்சரித்திருந்தார்.
ஜெயலலிதாவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று திருமாவளவன் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். இந் நிலையில் ராமதாஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பெயர் மற்றும் விளம்பரப் பலகைகள்ை தமிழில் எழுதக் கோரி தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பலகட்ட போராட்டத்தை சமீபத்தில் நடத்தினோம்.
அந்த சமயத்தில், திடீரென, 1983லிலும், 84லிலும் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை சுட்டிக் காட்டி, அந்தஉத்தரவுகளின்படி தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டதாக செய்தி வந்தது.
திரைப்படங்களுக்கு இப்படித்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லவோ, ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்றுசொல்லவோ யாருக்கும் உரிமை இல்லை என்று இன்றைக்கு முதல்வர் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல, அன்றைக்கு எம்.ஜி.ஆர்.உத்தரவிட்டபோது யாரும் கேள்வி எழுப்பவில்லை.
நாங்கள் இப்படித்தான் எழுதி வைப்போம், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப் பலகை எழுதுவோம் என்று யாரும் சொல்லவில்லை, குதர்க்கம்பேசவில்லை. அன்று எம்.ஜி.ஆர். எந்த உணர்வுடன் இந்த உத்தரவுகளைப் போட்டாரோ, அதே உணர்வுடன்தான் திரைப்படங்களுக்குதமிழ்ப் பெயர் வைக்கப்பட வேண்டும் என்று கோரினோம்.
எங்களது போராட்டத்தை ஆங்கில எதிர்ப்புப் போராட்டம் என விஷமப் பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. அண்ணாவின்கொள்கைக்கு எதிரானது என்று முதல்வரும் கூறியுள்ளார்.
அண்ணாவின் கொள்கை, இரு மொழிக் கொள்கை என்றாலு தமிழ், ஆட்சி மொழியாக எல்லாத் துறைகளிலும் திகழ்வதற்கான சூழ்நிலையைஉருவாக்குவதில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறி வந்தார்.
எல்லாத் துறைகளிலும் தமிழ் மொழி பயன்படுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம் என ஆட்சிக்கு வந்ததும் அறிவித்தவர்தான்ஜெயலலிதா. இப்போது பிரச்சினையைத் திசை திருப்புகிறார்.
ஆளுநர் உரையை தமிழில் படிக்கவே மாட்டோம்என்று சொன்னார்கள். இப்போது மாற்றிக் கொண்டு படித்துள்ளார்கள். அதுபோலவே,தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று கூறும் இவர்களே அதற்காக ஒரு சட்டம் கொண்டு வரும் நாளும்விரைவில் வரும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications