சட்டசபையில் திமுக-அதிமுக மோதல், சலசலப்பு
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்காமல், மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் திமுக தலைவர் கருணாநிதி என்றுஅதிமுக உறுப்பினர் ஹக்கீம் கூறியதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு மதுரைஅதிமுக எம்எல்ஏ ஹக்கீம் பேசுகையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சிறப்பான நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. ஆனால், சிலரோ உடல் நலம் சரியில்லைஎன்று கூறி மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டனர் என்றார்.
இதைக் கேட்டதும் திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து ஹக்கீமை எதிர்த்துக் கோஷமிட்டனர். அப்போது சபாநாயகர் காளிமுத்துகுறுக்கிட்டு, ஹக்கீமின் புகாருக்கு தங்களது தரப்புக்கு வாய்ப்பு தரப்படும்போது திமுகவினர் பதில் அளிக்கலாம் என்றார்.
ஆனால் அதை ஏற்காத சட்டசபை திமுக துணைத் தலைவர் துரைமுருகன், யார் மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொண்டார்கள்என்பதை உறுப்பினர் ஹக்கீம் நேரடியாக கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஹக்கீம், நான் கருணாநிதியைத்தான் குறிப்பிட்டுக் கூறுகிறேன் என்றார். இதையடுத்து அவரை எதிர்த்து திமுகஉறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து துரைமுருகன் குறுக்கிட்டு, உடல் நலமின்றி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நிலையிலும், சுனாமிநிவாரணத்திற்காக பிரதமர் நிதிக்கு ரூ. 1 கோடியை அளித்தார். அதேபோல, சன் டிவியின் சார்பிலும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியளிக்கமுன் வந்தனர். ஆனால் முதல்வர் தரப்பிலிருந்து இதுவரை பதிலே வரவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, சன் டிவி நிர்வாகம் சார்பில் அவர்களாகவே ஒரு தேதியை நிர்ணயித்து, அன்றைய தினம் நிதியளிக்கவருவதாக கடிதம் அனுப்பினர். ஆனால் அன்றைய தினம் எனக்கு வேறு வேலை இருந்ததால், நிதியை தலைமைச் செயலாளடம்அளிக்கலாம் என்று பதில் தெரிவித்திருந்தேன். அந்தப் பதிலுக்கு இதுவரை சன் டிவி நிர்வாகத்திடமிருந்து பதிலே வரவில்லை.
ரூ. 5 கோடி நிதியளிக்க சன் டிவி நிர்வாகம் தயாராக இருப்பதாக கூறப்பட்டாலும், ரூ. 2 கோடி மட்டுமே அவர்கள் நிதியளிக்க இருப்பதாகஎனக்குத் தகவல் வந்துள்ளது என்றார்.
இந்த விவாதத்தால் சபையில் பெரும் சலசலப்பு நிலவியது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications