சுனாமி நிவாரணம்: மத்திய அரசு மீது ஜெ பாய்ச்சல்
சென்னை:
சுனாமி நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாமதம் காட்டியதால், இரண்டாம் கட்ட நிவாரணப் பணிகளைத் தொடங்குவதில்தாமதம் ஏற்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய ஜெயலலிதா கூறியதாவது:
நிவாரண நிதி தொகுப்பு மத்திய அரசு மூலமாகவே வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். இதனால் 2ம்கட்ட நிவாரணப் பணிகளைத் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டது.
இந்தக் குழப்பத்தை நிவர்த்திக்கும் வகையில் நிவாரண நிதியை வழங்கும் மத்திய அரசின் அறிவிப்பு நேற்றிரவுதான் வெளியிடப்பட்டது.இதையடுத்து இரண்டாம் கட்ட நிவாரணப் பணி இன்று தான் தொடங்கியது.
கட்டுமரங்களை இழந்த மீனவர்களுக்கு ரூ.32,000 வழங்கும் பணி தொடங்கி விட்டது. மத்திய அரசு ரூ.983.68 கோடி வழங்கியுள்ளது.ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.250 கோடி இதில் கழிக்கப்பட்டுள்ளது.
இயந்திரப் படகுகள் வாங்க 35 சதவீத மானியத்துடன் கடன் வாங்குவதில் மீனவர்களுக்குத் தயக்கமுள்ளது. எனவே மத்திய அரசு முழுஅளவில் மானியம் வழங்க வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, மீனவர்களுக்கு 100 சதவீத மானியத்தைப் பெறமுயற்சிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
அப்போது திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, மத்திய அரசு நிவாரண நிதி வழங்கியதற்கு மாநில அரசு எந்த நன்றியும் தெரிவிக்கவில்லை என்றுகுற்றம் சாட்டினார்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, அது அவர்களின் கடமை. அவர்கள் எந்த சலுகையும் அளிக்கவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய புகழேந்தி, மத்திய அரசின் 35 சதவீத மானியம் போக, மீதமிருக்கும் 65 சதவீதத்தை தமிழக அரசு மானியமாகவழங்கலாம் என்றார்.
அதற்கு ஜெயலலிதா, மாநில அரசிடம் நிதியிருந்தால், மத்திய அரசை அணுகியிருக்கவே மாட்டோம். மத்திய அரசை எதிர்பார்த்திருக்கும்வேளையிலும் மாநில அரசு ரூ.3,096 கோடிக்கு நிவாரண நிதியை அறிவித்துள்ளது என்றார்.
அப்போது பேசிய புகழேந்தி, நிவாரணப் பணி நத்தை வேகத்தில் நடைபெறுகிறது. பல இடங்களில் நிவாரணப் பணிகள் தொடங்கவேஇல்லை. நிவாரணப் பணிகளைக் கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்என்று முதல்வர் உத்தரவிட்டிருந்தாலும், எந்த மாவட்ட ஆட்சியரும் அத்தகைய குழுவை அமைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications