பிகார், ஹரியானா: 55 சதவீத வாக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிகார், ஜார்க்கண்ட், ஹரியாணா மாநிலங்களில் இன்று மிக பலத்த பாதுகாப்புக்கிடையே சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப் பதிவுநடந்தது.

ஹரியாணாவில் இன்றே அனைத்து 90 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. பிகாரில் முதல் கட்டமாக 64 தொகுதிகளுக்கும் ஜார்க்கண்டில்24 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

மூன்று மாநிலங்களிலும் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தலையொட்டி பிகார், ஜார்க்கண்டில் போலீசாருடன் பாரா மிலிட்டரிப் படைகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நக்ஸல்கள் நிறைந்த தெற்கு பிகார், ஜார்க்கண்டில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று நக்ஸல்கள் வைத்தகண்ணி வெடியில் சிக்கி 7 போலீசார் பலியாயினர். பிகாரில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் 7 பேர் பலியாயினர்.

பிகாரில் கடந்த 15 ஆண்டுகளாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. ஜார்க்கண்டில் கடந்த 5ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு ஆட்சியில் உள்ளது. ஹரியாணாவில் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசியலோக்தள் ஆட்சியில் உள்ளது.

பிகாரில் எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், பாஸ்வானின் லோக் ஜன் சக்தி, ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆகியவைலாலு-ராப்ரிதேவி ஆட்சியை எதிர்த்து தனித்தனியே போட்டியிடுகின்றன.

ஜார்க்கண்டில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோச்சா ஆகியவை வலுவான கூட்டணியை அமைத்துள்ளன.

ஹரியானாவில் பா.ஜ.கவுடனான கூட்டணியை லோக்தளம் முறித்துக் கொண்டது. இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால்நிலைமை காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+