போலீஸ் ஸ்டேனுக்கு வந்த முதலிரவு பிரச்சனை!
சென்னை:
முதலிரவை எங்கே நடத்துவது என்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் அதற்கு தீர்வு கூறுமாறு காவல் நிலையத்தை நாடியது ஒரு புதுமணத்தம்பதி.
இந்த வித்தியாசமான சம்பவம் சென்னையில் நடந்தது.
சிந்தாதிரிப்பேட்டைச்ை சேர்ந்தவர் ராஜு. இவருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. தேவாலயத்தில்திருமணம் நடந்த பின்னர் முதலிரவை தங்கள் வீட்டில் கொள்ளலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் கூறினர்.
ஆனால், தங்களது வீட்டில்தான் வைக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கூறினர்.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறில் போய் முடிந்தது. அடிதடியும் ஏற்பட்டது.
இதையடுத்து புதுமணத் தம்பதியினரும், அவர்களது பெற்றோரும் காவல் நிலையம் சென்று போலீஸாரிடம் முறையிட்டனர். தங்களதுபிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கூற வேண்டும் என்ற கோரினர். இந்த வித்தியாசமான கேஸால் போலீசார் பரபரப்பாயினர்.
காவல் நிலையத்தில் இருந்த பெண் போலீஸாரை அழைத்த இன்ஸ்பெக்டர் இந்தப் பிரச்சனையை பேசித் தீர்க்குமாறு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டாரையும், பெண் வீட்டாரையும் அழைத்து பெண் போலீஸார் சமரசம் செய்தனர். முதலிரவை எங்குவைப்பது என்பதை தம்பதியே முடிவு செய்யட்டும். இதில் பெற்றோர் தலையிட வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications