கர்நாடக சட்டசபையில் எதிரொலித்த ஜெ. சொத்து குவிப்பு வழக்கு
பெங்களூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை உடனடியாகத் தொடங்காமல் கர்நாடக அரசுதாமதப்படுத்தி வருவதாக அம் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் எதியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கு பெங்களூருக்குமாற்றப்பட்டுள்ளது. இதில் ஆவணங்கள் மொழி பெயர்ப்புப் பணி நீண்ட காலமாக நடந்து வருகிறது.
இந் நிலையில் ஜெயேந்திரர் விவகாரத்தால் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலையை எடுத்துள்ள பா.ஜ.க. இப்போது இந்த சொத்துக் குவிப்புவழக்கு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
கர்நாடக சட்டசபையில் இந்த வழக்கு குறித்து ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மாதுசாமி என்ற உறுப்பினர் பிரச்சினை எழுப்பினார். அவர்கூறியதாவது:
கூடுதல் வரவு செலவு திட்டத்தில் நீதிமன்ற செலவுகளுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மீதான வழக்கை நடத்த நமதுபணத்தை ஏன் செலவழிக்க வேண்டும்? மக்களுக்கு செலவழிக்க வேண்டிய பணத்தை நாம் ஏன் இன்னொரு மாநில வழக்குக்கு செலவழிக்கவேண்டும்? இவ்வாறு செய்தால் நாளை ஆந்திர, கோவா மாநில வழக்குகளையும் நாம்தான் நடத்த வேண்டும் என்று கூறுவார்கள்.
மேலும் வழக்கு விசாரணைக்கு ஜெயலலிதா வரும்போது அவருக்கு நாம்தான் பாதுகாப்பு தர வேண்டும். அதற்கான செலவை மத்தியஅரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த துணை முதல்வரும் தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான சித்தராமையா, கூட்டாட்சிதத்துவப்படி இதை செய்ய வேண்டியது நமது கடமை. இதற்கு செலவழித்த ரூ.50 லட்சத்தை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம்என்றார்.
அப்போது பாஜக எம்.எல்.ஏ. எடியூரப்பா பேசுகையில், இவ்வளவு செலவு செய்தும் இந்த வழக்கின் விசாரணை இன்னும்தொடங்கவில்லை. விசாரணையை தடுப்பது யார்? நீதிமன்றம் அமைப்பது, அரசு வழக்கறிஞரை நியமிப்பது மற்றும ஆவணங்களைநியமிப்பதில் ஏற்பட்ட மாபெரும் கால தாமதத்திற்கான காரணம் என்ன? 6 மாதமாகியும் நீதிமன்றத்தில் ஒரு நாள் கூட விசாரணைநடக்கவில்லை. இதற்கான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என்றார்.
அப்போது பேசிய கன்னட சாளுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ், கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே காவிரி நீர்ப்பிரச்சினை இருக்கும்போது, வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா இங்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்.
இதைக் காரணம் காட்டி, வழக்கை பெங்களூரில் நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து விடுங்கள். இப்போதுகூட இதற்குகாலம் கடந்துவிடவில்லை. ஜெயலலிதா வழக்கை நமது மாநிலத்தில் விசாரித்தால், அடுத்து மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்போன்றவர்களின் வழக்குகளையும் இங்கு விசாரிக்க உத்தரவிடுவார்கள். எனவே ஜெயலலிதா வழக்கை இங்கே நடத்த வேண்டாம்என்றார்.
பின்னர் வெளியில் வந்த பா.ஜ.க தலைவர் எதியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த வழக்கு விசாரணை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். இதில் தேவையில்லாத கால தாமதம் செய்யப்படுகிறது. இதன்பின்னணியில் இருப்பர்கள் யார் என்று கேட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு தேவெ கெளடா மூலமாக ஜெ-சசிகலா தரப்பு முட்டுக்கட்டை போட்டு வருவதாக பரவலாகப் பேசப்பட்டுவரும் நிலையில் எதியூரப்பா இந்த விவகாரத்தை தோண்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
சமீபத்தில் தேவெ கெளடாவின் மகன் சென்னையில் சில முக்கியப் பிரபலங்களை சந்தித்துவிட்டுத் திரும்பியது, பெங்களூரில் உள்ள ஒருமதுபான உற்பத்தியாளர் மூலமாக நகர்த்தப்பட்டு வரும் காய்கள் ஆகியவையும் அரசல் புரசல் செய்திகளாக வெளி வந்தவண்ணம் உள்ளது.












Click it and Unblock the Notifications