ராமதாஸ், திருமா ஏமாற்று பேர்வழிகள்: கிருஷ்ணசாமி
சென்னை:
தமிழின் பெயரால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அரசியல்செய்து வருவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் திருமாவளவனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கிருஷ்ணசாமி இப்போது தனி மரமாய் நிற்கிறார். சண்டியர்படத்தின் தலைப்பை வைத்து திரையுலகுடன் மோதினார். இப்போது அதே ஆயுதத்தை திருமாவளவன் எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்தப் பின்னணியில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில், டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர்சேதுராமன் ஆகியோர் தமிழை வளர்ப்பதாக நடிக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் தமிழை வளர்க்க நினைக்கவில்லை, அரசியல்செய்ய முயல்கிறார்கள்.
3 பேருக்கும் தமிழ் குறித்த சிந்தையே கிடையாது. அவர்களது செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. மூன்று பேரும் சேர்ந்து மக்களைஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றார் கிருஷ்ணசாமி.
திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்:
இதற்கிடையே 10 ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு திட்டக்குடி மாஜிஸ்திரேட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
.அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாகரம், ஆவினன்குடி ஆகிய பகுதிகளில் கடந்த 1992ம் ஆண்டு நடந்த வன்முறை மற்றும் கலவரம் ஆகியவைதொடர்பாக திட்டக்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருமாவளவன், இணை பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் மற்றும் குமார்ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை பலமுறை சம்மன் அனுப்பியும் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந் நிலையில், மீண்டும்வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி அய்யப்பன், 3 பேரையும் ஆஜர்படுத்துமாறு கூறி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
அந்த உத்தரவில், உங்கள் 3 பேருடைய சொத்துக்களையும் ஏன் ஜப்தி செய்யக் கூடாது, உங்களை தலைமறைவான குற்றவாளிகளாக ஏன்அறிவிக்கக் கூடாது என்றும் நீதிபதி கேட்டுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications