234லிலும் தனித்து போட்டி: பாஜகவின் தைரியம்!
ஓசூர்:
சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசைக் கண்டித்து ஓசூரில் பாஜகவினர் பாதயாத்திரைப் போராட்டம் நடத்தினர். பாதயாத்திரையைத் ராஜா தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு கவலை கொள்ளாமல், தேவையில்லாத விஷயங்களில் அதிக அக்கறை காட்டி வருகிறது. வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். யாருடனும் நாங்கள் கூட்டணி வைக்கப் போவதில்லை.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசோ, சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்குவதை விட்டு விட்டு, வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டுள்ளது.
இது நிரந்தரத் தீர்வு கிடையாது. நாளைக்கு வீராணம் பகுதியில் நிச்சயம் தண்ணீர்ப் பிரச்சினை உருவாகும்.
ஓசூர் நகரம், தட்பவெப்ப நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பெங்களூரை ஒத்து விளங்குகிறது. எனவே இங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், கால் சென்டர்கள் அமைக்க அரசு முன் வர வேண்டும்.
இதன் மூலம் ஓசூர் நகரம் முன்னேறிய நகரமாக உருவாகும். சென்னையில் மட்டுமே சாப்ட்வேர் நிறுவனங்களை தொடங்கக் கூடாது. தமிழகம் முழுவதும் விரிவாக்க வேண்டும்.
கெலவரப்பள்ளியில் அணை கட்டி 25 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் விவசாயத்துக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதேபோல, ஓசூரிலிருந்து சென்னைக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும்.
ஓசூருக்கும், பெங்களூருக்கும் இடையே மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார் ராஜா.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications