ஜெயேந்திரருக்கு தேன் வழங்கிய நரிக் குறவர்கள்!
கலவை:
ஜெயேந்திரரை நரிக் குறவர்கள் சந்தித்து அவருக்கு தேன் வழங்கினார்கள்.
கலவை மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரை தினமும் பல தரப்பினரும் சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று அவரைச்சந்திக்க வித்தியாசமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
நரிக் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 25 பேர் ஆற்காட்டிலிருந்து ஜெயேந்திரரைப் பார்க்க வந்தனர்.
வழக்கமான நாட்களில் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு இவர்கள் வந்திருந்தால் உள்ளே நுழைய அனுமதிகிடைத்திருக்காது. ஆனால் சங்கரராமன் கொலையால் ஜாமீனில் கலவை மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரை சந்திக்கஉடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
ஜெயேந்திரரை பார்த்து கும்பிட்டவாறே சென்ற நரிக் குறவர்கள் அவரிடம் தாங்கள் கொண்டு வந்த மலைத் தேனைக்கொடுத்தனர். அவரும் புன்முறுவலுடன் வாங்கிக் கொண்டு அவர்களை ஆசிர்வதித்தார்.
மெளன விரதம் இருப்பதால் அவர்கள் அனைவரையும் சாப்பிட்டு விட்டுச் செல்லுமாறு சைகையால் கூறினார் ஜெயேந்திரர்.
இதையடுத்து மீண்டும் அவரை கும்பிட்டுவிட்டு மடத்திற்குள் சென்று சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர் நரிக் குறவர்கள்.
நரிக் குறவர்களில் ஒருவர் கூறுகையில், கடவுளுக்கு சமமாக நாங்கள் ஜெயேந்திரரை நினைக்கிறோம். அவரைப் பார்ப்பதற்காகபல ஆண்டுகள் காத்திருந்தோம். இப்போதுதான் பார்க்க முடிந்தது என்றார்.
இதுவரை நரிக் குறவர் சமூகத்தைச் சேர்ந்த யாரும் ஜெயேந்திரரை சந்திக்க அனுமதிக்கப்பட்டதில்லை, அவரும் சந்தித்ததில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications