வீரப்பன் பிரேத பரிசோதனை: டாக்டர்களிடம் விசாரணை
தர்மபுரி:
வீரப்பனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவினரிடம் வரும் 11ம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தர்மபுரி மாவட்ட உதவி கலெக்டர் பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார். அதிரடிப்படைத் தலைவர் விஜய்குமார், டிஎஸ்பி செந்தாமரைக் கண்ணன், இன்ஸ்பெக்டர் வெள்ளைதுரை, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் இவர் விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணை இழுத்துக் கொண்டே போய்க் கொண்டுள்ளது. இந் நிலையில் வீரப்பன் மரணத்தில் மர்மங்கள் உள்ளதாகவும், உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு பிரதேப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரி முத்துலட்சுமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து ஆர்டிஓ (உதவி கலெக்டர்) விசாரணையை ஒரு மாதத்துக்குள் முடிக்குமாறும், அதன் பின்னர் முத்துலட்சுமி சொல்லும் புகாரை தர்மபுரி போலீசார் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் ஆர்டிஓ தனது இறுதிக் கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமை தொடங்குகிறார். அன்றைய தினம் வீரப்பன் மற்றும் 3 பேரின் உடல்களை பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர் பேராசிரியர் வள்ளிநாயகம் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடக்கிறது.
பின்னர் வீரப்பன் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரபாகரன், சுப்பிரமணியன் ஆகியோரிடமும் விசாரணை நடக்கவுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications