மேலவளவு கொலை: 17 பேரின் ஜாமீன் ரத்து
மதுரை:
மதுரை மேலூர் அருகே மேலவளவு கிராம தலித் பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேருக்குவழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்தும், அவர்களை ஒரு வாரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூர் அருகே உள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் தலித் வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர்தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைப் பொறுக்க முடியாத இன்னொரு வகுப்பைச் சேர்ந்த சிலர் கடந்த 1997ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிமுருகேசன் உள்ளிட்ட 6 பேரை படுகொலை செய்தனர்.
இந்த பயங்கர கொலை தொடர்பாக 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முதலில் இந்த வழக்கை மதுரை எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றம்விசாரித்து வந்தது. ஆனால் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று முருகேசன் உள்ளிட்டவர்களின் உறவினர்கள் சென்னைஉயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது.
சேலம் நீதிமன்றம் விசாரணை நடத்தி 17 பேர் மீதான குற்றச்சாட்டுக்களை ஊர்ஜிதம் செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 13பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். தண்டனையை ரத்து செய்யுமாறு கோரியஅவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யுமாறும் கோரினர். மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் 17பேரையும் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முருகேசன் உள்ளிட்டோரின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஜாமீனை ரத்து செய்யுமாறுஅவர்கள் கோரினர். இதை விசாரித்த நீதிபதிகள் பி.என்.அகர்வால், பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,
17 பேருக்கும் கொடுக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அவர்களை 1 வாரத்திற்குள் கைது செய்யுமாறும் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.
17 பேரும் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் ஒரு மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு சென்னைஉயர்நீதிமன்றத்திற்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications