ராணுவம் மீது ஜெ. புகார்: ராமதாஸ் காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுனாமியால் இறந்தவர்களின் சடலங்களை அகற்ற ராணுவத்தினர் முன் வரவில்லை என்று கூறியதை முதல்வர் ஜெயலலிதா திரும்பப் பெறவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை லெப்டினண்ட் ஜெனரல் சோப்ரா மறுத்துள்ளார். அனைத்து வகையான மீட்புப் பணிகளிலும்ராணுவத்தினர் ஈடுபட்ட நிலையில், அவர்களைக் குற்றஞ்சாட்டுவது ராணுவ வீரர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி விடும் என்றுஅவர் கூறியுள்ளார்.

அவர் கூறியது முற்றிலும் சரியானதாகும். ராணுவ வீரர்களின் பணியை பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் பாராட்டுகிறார்கள்.

எனவே ராணுவ வீரர்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை ஜெயலலிதா தவிர்த்திருக்க வேண்டும். இப்போது ராணுவ மூத்த அதிகாரி விளக்கம்அளித்துள்ள நிலையில், சட்டசபையில் தான் தெரிவித்த கருத்தை முதல்வர் திரும்பப் பெற வேண்டும். மேலும் இது தொடர்பான பகுதிகளைசபைக் குறிப்பில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+