குருமூர்த்தி மீது வழக்கு: பிரேம்குமார் விளக்கம்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலையில் உண்மையான குற்றவாளிகளை போலி குற்றவாளிகள் என்று கூறி போலீஸாரை திசை திருப்ப முயன்றதால்தான்ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார்கூறியுள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் பதிவுசெய்துள்ளனர். அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆசிரியர், நிர்வாகஇயக்குநர் உள்ளிட்ட 4 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குருமூர்த்தி மீது திடீரென வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து பிரேம்குமார் கூறுகையில்,
போலீஸ் விசாரணைக்கு குருமூர்த்தியை அழைத்தபோது அவர் கதிரவன், ரஜினி என்ற சின்னா ஆகிய இருவரும் போலி குற்றவாளிகள்என்று தெரிவித்தார்.
சரி, அப்படியானால் உண்மையான குற்றவாளிகள் யார் என்று கேட்டபோது அவர் பதில் கூற மறுத்து விட்டார். இதன் மூலம் உண்மையானகுற்றவாளிகள் யார் என்று தனக்குத் தெரிந்த தகவலை போலீஸாரிடம் அவர் மறைத்து விட்டார்.
மேலும், போலீஸ் விசாரணையின் வீடியோ பதிவை தனக்குத் தருமாறு கூறி ரூ. 1,000 காசோலையையும் எனக்கு அனுப்பினார். அத்தோடுவக்கீல் நோட்டீஸும் அனுப்பினார்.
தன்னை விசாரணைக்கு அழைத்தது செல்லாது என்று கூறி அதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் நோட்டீஸ்அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜிடம் இதுகுறித்து புகார் செய்யப்பட்டது. குருமூர்த்தியிடம்நடத்தப்பட்ட விசாரணை அடங்கிய வீடியோவும் நீதிபதிக்கு போட்டுக் காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து குருமூர்த்தி மீது வழக்குப் பதிவுசெய்ய நீதிபதி அனுமதி அளித்தார் என்றார் பிரேம்குமார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications