நாளை கூடுகிறது அதிமுக பொதுக் குழு: வருகின்றன அதிரடி மாற்றங்கள்
சென்னை:
அதிமுகவின் பொதுக் குழு மற்றும் செயற் குழுக்க்கள் நாளை கூடுகின்றன. இக் கூட்டங்களைத் தொடர்ந்து கட்சிக்குள் பல அதிரடிமாற்றங்கள் செய்ய முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
கொளப்பாக்கத்தில் நடந்த அவசரகோல நேர்காணலில் பல மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். இதையடுத்து நடந்த மக்களவைத்தேர்தலில் அதிமுகவுக்கு படுதோல்வி ஏற்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பழைய நிர்வாகிகள் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதால், தேர்தலின்போது பிரச்சாரப் பணியைச்செய்யக் கூட அதிமுக திணறியது.
இதையடுத்து கட்சியில் செயல்படாத நிர்வாகிகளைத் தூக்கிவிட்டு, சுறுசுறுப்பானவர்களை நியமிக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
செயற்குழு, பொதுக் குழுக்கள் இரண்டும் ஒரே நாளில் கூடுவதால் ஒரு சிலர் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவர் என்று தெரிகிறது. ஆனால்,தங்கள் மாவட்ட அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் குறித்து புகார் காண்டம் வாசிக்க அனுமதி கோரியும் பேச அனுமதி கோரியும்ஆயிரக்கணக்கான கட்சியினர் அதிமுக தலைமைக் கழகத்துக்கும் முதல்வருக்கும் பேக்ஸ்களை தட்டி வருகின்றனர்.
ஆனால், கட்சியின் முன்பே வைத்துக் கொண்டு மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை யாரும் விமர்சிப்பதை முதல்வர்விரும்பவில்லை என்று தெரிகிறது. கொளப்பாக்கத்தில் இந்தத் தவறு தான் நடந்தது.
இதனால் குறிப்பிட்ட சிலரை மட்டும் பொதுவான விஷயங்கள் குறித்து பேச வைத்துவிட்டு, பிறரிடம் மனுக்களை வாங்கி அதன்அடிப்படையில் கட்சி நிர்வாகிகளை மாற்ற ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
இந்த ஆண்டிலேயே சட்டமன்றத் தேர்தலை நடத்திவிட ஜெயலலிதா தீவிரமாக உள்ளதால் இந்த பொதுக் குழு மற்றும் செயற்குழுக்கூட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
அமைச்சரவைக் கூட்டம்:
இதற்கிடையே இன்று கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
வரும் மார்ச்சில் பட்ஜெட் கூட்டம் நடப்பதையொட்டி சில கொள்கை முடிவுகள் எடுப்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications