சோ, இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபரிடம் காஞ்சி போலீஸ் விசாரணை!
காஞ்சிபுரம்:
குருமூர்த்தியின் கட்டுரைகளை வெளியிட்டது குறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்மனோஜ்குமார் சொந்தாலியா, துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் சோ ஆகியோரிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் இன்றுவிசாரணை நடத்தினர்.
பிரபல ஆடிட்டரும், கட்டுரையாளரும், சங் பரிவார் ஆதரவு சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் நிறுவனருமான எஸ்.குருமூர்த்தி மீதுதனிப்படை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எஸ்.பி. பிரேம்குமாருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியதோடு, விசாரணையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை கொடுக்குமாறு கூறிரூ.1,000க்கான காசோலை அனுப்பினார் குருமூர்த்தி. இதைத் தொடர்ந்து விசாரணையை திசை திருப்பும் வகையில் கட்டுரைகள்எழுதியதாக குருமூர்த்தி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் குருமூர்த்தியின் கட்டுரைகள் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் பத்திரிக்கைகளின் பதிப்பாளகள், ஆசிரியர் உள்பட 4 பேர்இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குருமூர்த்தியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார்.
அவர் தற்போது மும்பையில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் காஞ்சி போலீஸாருக்குத் தகவல் அனுப்பியுள்ளார். வரும் 26ம் தேதிதான்குருமூர்த்தி சென்னை திரும்புவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந் நிலையில் குருமூர்த்தியின் கட்டுரையை வெளியிட்ட துக்ளக் இதழின் ஆசிரியர் சோ, த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நிர்வாகஇயக்குனர் மனோஜ் குமார் சொந்தாலியா ஆகியோருக்கு காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் நேற்று திடீரென சம்மன் அனுப்பினர்.
போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த சம்மன் வாபஸ்பெறப்பட்டது.
இந் நிலையில் இன்று விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனவேல் தலைமையில் 6 பேர் கொண்ட போலீஸ் குழு சென்னைவந்தது. முதலில் த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அலுவலகத்துக்குச் சென்ற இக் குழு சொந்தாலியா மற்றும் ஆசிரியரிடம்விசாரணை நடத்தியது.
கட்டுரைகளை குருமூர்த்தியே எழுதினாரா அல்லது எழுதித் தருமாறு கேட்டீர்களா என்பன உள்பட பல கேள்விகளை போலீசார் கேட்டனர்.சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.
இதையடுத்து இந்த போலீஸ் படை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள துக்ளக் அலுவலகத்துச் சென்றது. அங்கு சோவிடம் இந்தப் போலீஸ்படை விசாரணை நடத்தியது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த விசாரணைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சோ, குருமூர்த்தியின் கட்டுரைகளை நான் தொடர்ந்துபிரசுரிப்பேன். அது சட்ட விரோதமானது என்றால் நான் பிரசுரித்திருக்கவே மாட்டேன்.
என் விஷயத்தில் போலீசார் என்னை சாட்சியாக சேர்த்துள்ளனர். மற்றபடி இதை துன்புறுத்தலாக நான் கருதவில்லை. ஆனால், குருமூர்த்திவிஷயத்தில் போலீசார் அவரை துன்புறுத்தி வருகின்றனர். அது தான் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் மீதான வழக்கில் எந்தஆதாரமும் அடிப்படையும் இல்லை. கோர்ட்டில் அது நிற்காது என்றார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் சொந்தாலியா கூறுகையில், குருமூர்த்தியின் கட்டுரைகள் குறித்து சில விவரங்களைக் கேட்டார்கள், அதைத்தந்தேன் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications