அடுத்தடுத்து மூவரை கொன்ற கொலைகார லாரி!
சென்னை:
சென்னையில் தாறுமாறாக ஓடிய மணல் லாரி அடுத்தடுத்து பல வாகனங்களில் மோதி 3 பேரை கொன்றது.
டிப்பர் லாரிகள் எனப்படும் அரைபாடி மணல் லாரிகள் தமிழகத்தில் சராசரியாக தினமும் 2 பேரின் உயிரையாவதுஎடுத்து வருகின்றன. பெரும்பாலும் மணலை சட்ட விரோதமாக திருடி, லோடு ஏற்றிக் கொண்டு காட்டு வேகத்தில்செல்வது இந்த லாரி டிரைவர்களின் வழக்கம்.
இன்று காலை தாம்பரத்திலிருந்து ஒரு மணல் லாரி சென்னை நகருக்குள் வந்து கொண்டிருந்தது. ஆலந்தூர்சிமென்ட் ரோடு பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தன.
அப்போது படு வேகமாக வந்த அந்த மணல் லாரி பிரேக் பிடிக்காமல், சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த வாகனகூட்டத்திற்குள் புகுந்து தாறுமாறாக ஓடியது.
இதில் 5 மோட்டார் சைக்கிள்கள், ஒரு லாரி, கார் ஆகியவை சேதமடைந்தன. இதில் ஒரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த பார்த்தசாரதி என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
அத்தோடு நிற்காத கொலைகார லாரி சாலையோரம் உள்ள பிளாட்பாரத்தில் மோதி கடைகளையும் உடைத்துவிட்டுநின்றது.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸார் லாரியை பறிமுதல் செய்தனர். லாரியை அதே டிரைவரே ஓட்டிக்கொண்டு போலீஸ் நிலையத்துச் சென்றான்.
அப்போது கத்திப்பாரா சந்திப்பு அருகே லாரி மீண்டும் தாறுமாறாக ஓடியது. இதில் மாநகரப் பேருந்து, 2 மோட்டார்சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை மீது அந்த லாரி மோதியது.
இதில் ஆட்டோ ஒன்று லாரிக்கும், பிற வாகனங்களுக்கும் இடையே சிக்கி நசுங்கியது. இதில் ஆட்டோவில் பயணம்செய்து கொண்டிருந்த, குமார் மற்றும் அவரது மனைவி சியாமளா ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயேஇறந்தனர். ஆட்டோ டிரைவர் மதியழகன் படுகாயமடைந்தார்.
மகள் கல்யாணத்தையொட்டி திருமண மண்டபத்தை பார்க்க போய்க் கொண்டிருந்தது குமார்-சியாமளா தம்பதிஎன்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோசமான விபத்தில் ஒரு அரசு பேருந்து, 2 ஆட்டோ, 2 கார், 7 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. 7பேர் காயமடைந்தனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications