சுனாமி பாதித்த நாகையில் மாதா அமிர்தனந்தமயி
நாகப்பட்டிணம்:
நாகப்பட்டிணத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாதா அமிர்தனந்தமயி பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகேட்டார்.
சுனாமி நிவாரணத்துக்காக இவரது ஆஸ்ரமம் ரூ. 100 கோடி செலவிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாகூர் அருகே உள்ள பட்டினச்சேரி, சாமந்தன்பேட்டை, நம்பியார் நகர் மற்றும் அக்கரைப்பேட்டை ஆகிய பகுதிகளை மாதாபார்வையிட்டார். சுமார் 10 மணி நேரம் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அவர், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அவருடன் சுமார் 500 வெளிநாட்டு பக்தர்களும் உடன் வந்தனர். தனது மடத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளைபார்வையிட்ட மாதா, அவற்றை வேகப்படுத்தவும் உத்தரவிட்டார்.
சாமந்தன்பேட்டையில் மாதா அமிர்தனந்தமயி மடம் 100 தாற்காலிக இருப்பிடங்களை அமைத்து மீனவர்களை குடியேற்றியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1,300 வீடுகள் கட்டித் தரவும், சுனாமியால் கணவனை இழந்த 100 பெண்களுக்கு மாதம் ரூ. 450 ஓய்வூதியம்தரவும் மடம் திட்டமிட்டுள்ளது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக இல்லங்கள் கட்டுவதோடு, குழந்தைகளை இழந்த பெண்களுக்கு அதில் வேலைவாய்ப்புகளைஅளிக்கவும் இந்த மடம் முடிவு செய்துள்ளது.
10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் அஸிஸ்டெண்ட் வேலைவாய்ப்பைத்தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications