பிரேம்குமாருக்கு குருமூர்த்தி மீண்டும் நோட்டீஸ்!
சென்னை:
காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவில் நடந்த விசாரணையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு நகலை வழங்கக் கோரி ஆடிட்டர்எஸ்.குருமூர்த்தியின் வழக்கறிஞர், எஸ்.பி. பிரேம்குமாருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணை தொடர்பான வாக்குமூலங்கள், வீடியோ காட்சிள் நக்கீரன் வாரஇதழில் தொடர் கதை போல இடம் பெற்று வருகின்றன. காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார்தான் நக்கீரன் இதழுக்கு இவற்றை வழங்கிவருவதாக ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந் நிலையில் காட்டுப் பங்களாவுக்கு அழைத்து சங்கர மட தொடர்புகள் குறித்து குருமூர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்தவிசாரணையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவின் நகலை வழங்கக் கோரி பிரேம்குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்குருமூர்த்தி. இதன் எதிரொலியாகத்தான் அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் மீண்டும் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் குருமூர்த்தி. இந்த நோட்டீஸில் குருமூர்த்தியின் வழக்கறிஞர் சங்கரநாராயணன் கூறியுள்ளதாவது:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணை விவரங்களையும், எனது கட்சிக்காரர் (குருமூர்த்தி) குறித்ததகவல்களை தாங்கள் குறிப்பிட்ட ஒரு பத்திகைக்கு (நக்கீரன்) லீக் செய்துள்ளதால், எனது கட்சிக்காரருக்கு மட்டுமல்லாது ஜெயேந்திரரின்புகழும் சேர்ந்து கெடுகிறது.
பிப்ரவரி 9ம் தேதி குருமூர்த்தியை விசாரித்தபோது வீடியோ படம் எடுக்க அவர் தடை விதிக்கவில்லை. முன் கூட்டியே அதை அவருக்குதெரிவிக்காத போதிலும் கூட அதை ஆட்சேபிக்காமல் ஒத்துழைப்பு அளித்தார்.
ஆனால் அன்று நடந்த விசாரணை விவரங்கள் ஒன்று விடாமல் நக்கீரன் இதழில் வந்துள்ளது. வீடியோ காட்சிகளும் நக்கீரன் இதழில்வெளியாகியுள்ளது. தனிப்படை போலீஸார் கொடுக்காமால் இவற்றை நக்கீரனால் வெளியிட்டிருக்க முடியாது.
இதன் மூலம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 162வது பிரிவை தாங்கள் மீறியுள்ளீர்கள். எனவே உங்கள் மீது கிரிமினல் சட்டப்படிநடவடிக்கை எடுக்க எனது கட்சிக்காரர் முடிவு செய்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வழக்கு குறித்து எழுதியதற்காக குருமுர்த்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால் நக்கீரன் மீதுமட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
எனவே நக்கீரனுக்கு வழங்குவது போலவே எனது கட்சிக்காரருக்கும் வீடியோ பதிவின் நகலை வழங்க வேண்டும். அதற்கான செலவைஎனது கட்சிக்காரர் ஏற்றுக் கொள்வார். இல்லாவிட்டால் தங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications