மாணவி தற்கொலை முயற்சி: மாணவன் கைது
சென்னை:
தன்னைக் காதலிப்பதாக பகிரங்கமாக சொல்லும்படி மாணவர் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்துமாணவன் கைது செய்யப்பட்டார்.
சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருபவர் லட்சுமணன். நன்றாகப் படிக்கும் இந்தமாணவன், அதே நேரத்தில் பிறரை கிண்டலடிப்பது, குறிப்பாக மாணவிகளிடம் சில்மிஷம் செய்வதிலும் தீவிரமாக இருந்துள்ளார்.
இந் நிலையில் உடன் படிக்கும் ஒரு மாணவியை (இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் மகள், பெயர் விபரம் மறைக்கப்பட்டுள்ளது)தொடர்ந்து கேலி செய்து சீண்டி வந்துள்ளார்.
இந் நிலையில் காதல் தினமான நேற்று அந்த மாணவியிடம் சென்ற லட்சுமணன், நீ என்னைக் காதலிப்பதாக வகுப்பறையில் அனைவர்முன்பும் வைத்து சொல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.
அந்த மாணவி மறுக்கவே, அவரை மிரட்டியுள்ளார்.
இதனால் மனம் வெறுத்துப் போன அந்த மாணவி வீட்டுக்குச் சென்று பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் சிடலபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து லட்சுமணனை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர் மீது ஈவ்டீசிங் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகும் என்று தெரிகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications