சுனாமி நிவாரணம் என்ற பெயரில் மதமாற்றம்: விஎச்பி புகார்
நாகப்பட்டிணம்:
சுனாமி தாக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவி என்ற பெயரில் மதமாற்றங்கள் நடந்து வருவதாக விஸ்வ இந்து பரிஷத் குற்றம்சாட்டியுள்ளது.
அந்த அமைப்பின் சார்பில் மீனவர்களுக்கு 10 பைபர் படகுகளை அதன் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கல் வழங்கினார்.பின்னர் அவர் பேசுகையில்,
சுனாமி பேரழிவு கலியுகம் தொடங்கிவிட்டதையே உணர்த்துகிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் துயரத்தில் இருக்கும்போது, ஒரு சிலர் மதமாற்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகக் கூறி அவர்களை மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்து அமைப்புகள்ஒன்றுபட வேண்டும்.
தூய்மையின் அடையாளமாகத் திகழும் மாதா அமிர்தனந்தமயி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆசி வழங்கியுள்ளார். இதுஅவர்கள் செய்த பாக்கியம் என்றார்.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்துக்களை மிகவும் புண்படுத்தி விட்டார் ஜெயலலிதா.அவரது அரசுக்கு எதிராக மாபெரும் எதிர் பிரசார போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
விரைவில் பிரசாரம் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். தமிழக அரசின் பொய்ப் பிரசாரங்களுக்கு பதிலடியாக இது அமையும்.
காவல்துறையினர் தங்களது எல்லையை மீறி நடந்து வருகின்றனர். நீதிமன்றங்கள் செய்ய வேண்டியவற்றையெல்லாம்இவர்களாகவே சட்ட விரோதமாக செய்து வருகிறார்கள் என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications