தேர்தலை சந்திக்க ஜெ தயாரா? ராமதாஸ் சவால்
திண்டிவனம்:
தைரியம் இருந்தால் சட்டசபையை கலைத்து விட்டு இப்போதே தேர்தலை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா தயாரா?என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில்தேர்தல் வரும். அப்போது இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு காண்கிறார் ஜெயலலிதா.
ஆசைப்படுவதற்கும் ஒரு அளவு உள்ளது. எல்லோரும் கனவு காணலாம். அதேபோல ஜெயலலிதாவும் கனவுகாண்கிறார்.
ஆனால் இரு தேர்தல்களிலும் வெற்றி பெறலாம் என்பதை கனவில் மட்டுமே ஜெயலலிதா நினைத்துப் பார்க்கமுடியும். மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு முழுமையான பதவிக் காலத்தை பூர்த்தி செய்யும். இடையில்தேர்தல் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெயலலிதாவின் ஆசை நிச்சயம் நிறைவேறாது.
வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு நாடே மாறி விட்ட நிலையில் வாக்குச் சீட்டுக்குப் போகச் சொல்கிறார் ஜெயலலிதா.தோல்விகளுக்குப் பிறகு எதையாவது மாற்ற வேண்டும் என்று கூறுவது அதிமுகவின் வாடிக்கையாகி விட்டது.
மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் அரசியல் பண்பாடு. அதை விடுத்து வாக்குப் பதிவுஇயந்திரத்தின் மீது பழி சுமத்துவது மக்களை அவமதிப்பது போலாகும்.
மக்கள் தன் பக்கம்தான் என்று ஜெயலலிதா நினைத்தால் இப்போதே சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலைசந்திக்கத் தயாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
ஜெயலலிதா பேசுவதைப் பார்த்தால் செப்டம்பரில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரலாம் போலத் தெரிகிறதுஎன்றார் ராமதாஸ்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications