ஜெயேந்திரரை மீண்டும் கைது செய்ய திட்டம்?
செங்கல்பட்டு:
ரவி சுப்பிரமணியம் விவகாரம் தொடர்பாக முன் ஜாமீன் கோரியுள்ள பெண் வழக்கறிஞர் நசீமா பானுவின் மனு மீது இன்று இறுதிக் கட்டவிசாரணை நடக்கிறது.
இதற்கிடையே ரவி சுப்பிரமணியம் கொடுத்த புகாரை வைத்து ஜெயேந்திரருக்குத் தரப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய தமிழக அரசுநடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிவிட்ட காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் மீதான குற்றச்சாட்டுக்களை போலீசார்கைவிட்டுவிட்டனர். ஆனாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்ந்து அவர் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் கிளைச் சிறையில் உள்ள தன்னை சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம் ஆகியோரின் சார்பில்வழக்கறிஞர்கள் ரேவதி, நசீமா பானு ஆகியோர் சந்தித்து கொலை மிரட்டல் விடுத்ததாக ரவி சுப்பிரமணியம் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ரேவதி, நசீமாவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து நசீமா பானு முன் ஜாமீன் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று நீதிபதி அக்பர்அலி விசாரித்தார். இன்றும் விசாரணை நடக்கிறது. விசாரணை முடியும் வரை நசமீாவைக் கைது செய்ய தடை விதித்துள்ளார் நீதிபதி.
ஜெயேந்திரை மீண்டும் கைது?:
முன்னதாக சாட்சிகளைக் கலைக்க முயலக் கூடாது என்ற நிபந்தனையின்படி தான் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இப்போது வழக்கறிஞர்கள் மூலமாக ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாகக் கூறி ஜெயேந்திரரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு செய்யும் என்று கூறப்படுகிறது.
ஜாமீனை ரத்து செய்ய வைத்து அவரை மீண்டும் கைது செய்யும் நோக்கத்துடன் தான் ரவி சுப்பிரமணியம் மூலமாக சங்கர மடத்தின் மீதுபுகார் கொடுக்க வைத்துள்ளது போலீஸ் என்கின்றனர் ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள்.
2 போலிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி:
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 2 போலி குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.
போலி குற்றவாளிகளாக சரணடைந்து கைது செய்யப்பட்ட சேகர், தேவராஜ் ஆகிய இருவரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அக்பர் அலி இரு மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications