கடலோர வீடுகளை அகற்ற தமிழக அரசு உத்தரவு
சென்னை:
கடற் கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்குவருவாய்த்துறையின், பேரழிவு மேலாண்மைப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
சுனாமியால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, பல்லாயிரகணக்கானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்துவருவாய்த் துறையில், பேரழிவு மேலாண்மைப் பிரிவு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
எதிர்காலத்தில் சுனாமி போன்ற இயற்கை சீற்றத்திலிருந்து உயிர்களைக் காப்பது எப்படி என்பது குறித்து பல்வேறு பரிந்துரைகளை இந்தப்பிரிவு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு இந்தப் பிரிவு ஒரு உத்தரவை அனுப்பியுள்ளது.
அதில், கடலிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள வீடுகள், கட்டடங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.தேவைப்பட்டால், 500 முதல் 1,000 மீட்டர் தொலைவுக்குள் உள்ள வீடுகளையும் அப்புறப்படுத்தலாம்.
வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், குடியிருப்போர் ஆகியோருடன் ஆட்சித்தலைவர் பேசி அவர்களது விருப்பத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
வீடுகளை இடமாற்றும்போது, தற்போதுள்ள வீடுகள், நிலங்களுக்குப் பதிலாக வேறு இடத்தில் மாற்று நிலங்கள் வழங்கப்படும். அந்தஇடத்தில் வீடு கட்டிக் கொள்ள அரசு அல்லது தன்னார்வ அமைப்புகள் மூலம் முழுமையான நிதியுதவி வழங்கப்படும்.
இடமாறிச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் நிலத்துக்குரிய பட்டா தாமதமில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடலிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள ஹோட்டல்கள், கடற்கரை ரிசார்டுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள்ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் வராது என்று வருவாய்த்துறை விளக்கியுள்ளது.
அரசின் இந்த உத்தரவின் மூலம், கடலோரத்தில் வசித்து வந்த மீனவர்கள் வேறு இடங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ஆனால் அரசின் திட்டம் தங்களுக்கு எந்தவிதத்திலும் உதவாது, கடலோரத்தில் வசித்தால் மட்டுமே தங்களால் மீன் பிடி தொழிலில்முழுமையாக ஈடுபட முடியும் என மீனவர்கள் கூறுகிறார்கள்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications