எம்எல்ஏ கொலை: போலீஸ் காவலில் ராஜஸ்தான் கொள்ளையன்
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபலகொள்ளையன் தரம்சிங்கை 12 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பொன்னேரி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் கடந்த மாதம் 9ம் தேதி அவரது வீட்டில் வைத்து கொள்ளைக் கும்பலால் படுகொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இதை வட நாட்டுக் கும்பல் தான் செய்தது என்று தெரிய வந்ததால் ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களுக்கு தமிழக போலீஸ் படைவிரைந்தது. அங்கு விசாரணை நடத்தி ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் வைத்து தரம்சிங் என்பவனை தமிழக போலீஸார் கைது செய்தனர்.
இவன் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவன் என்று கூறப்படுகிறது.
3 நாட்களுக்கு முன் தரம்சிங்கை பொன்னேரிக்குக் கொண்டுவந்த போலீஸார் அங்குள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்திசிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் தரம்சிங் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 2003ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் சோழாவரத்தில் நடந்தகொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தரம்சிங்கை 12 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.
இதைப் பரிசீலித்த நீதிபதி கலைப் பொன்னி, 12 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து தரம்சிங்கை போலீஸார்பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
சோழாவரம் கொலை, கொள்ளை தொடர்பாக தரம்சிங் காவலில் எடுக்கப்பட்டாலும் கூட, சுதர்சனம் கொலை வழக்கு குறித்துத்தான்அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சேலம் காங்கிரஸ் தலைவர் தாளமுத்து உள்பட தமிழகத்தில் பல இடங்களில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் தரம்சிங்கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications